நீயா நானா பார்த்திடலாம்... சர்கார் குழுவுக்கு சவால் விடும் தமிழ் ராக்கர்ஸ்

Tamilrockers - sarkar controversy: நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் ஆகியவை இதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப் போகின்றன?

Tamilrockers and sarkar: சர்கார் படம் தடைகள் பல கடந்து வந்தாலும், நிஜ வில்லனாக தலை நீட்டியிருக்கிறது தமிழ் ராக்கர்ஸ். தடைகளை மீறி ஹெச்.டி தரத்தில் சர்கார் படத்தை வெளியிடுவோம் என தமிழ் ராக்கர்ஸ் சவால் விட்டிருப்பது கோடம்பாக்கத்தை அதிர வைத்திருக்கிறது. விஜய், ஏ.ஆர்.முருகதாஸ், சன் பிக்சர்ஸ் என பெரிய ஜாம்பவான்கள் கைகோர்த்த படத்திற்கு இந்த நிலையா?

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில், நடிகர் விஜய் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஜோடி சேர்ந்திருக்கும் படம் சர்கார். சமீபத்தில் இப்படம் திருட்டு கதை எனக் கூறப்படும் விவகார்த்தில் சிக்கி, பெரும் சவால்களை மேற்கொண்டது. நீதிமன்றம் வரை சென்ற இந்த வழக்கில், பாக்யராஜ் மற்றும் வருண் ராஜேந்திரன் தரப்பு வெற்றிப்பெற்றது.

Sarkar Tamilrockers: தமிழ் ராக்கர்ஸை சமாளிப்பாரா சர்கார்?

ஒரு புயலே ஓய்ந்து முடிச்சாச்சு, இனி தீபாவளிக்கு எவ்வித தடையுமின்றி படத்தை வெளியிடலாம் என்று நினைத்த சன் பிக்சர்ஸ்க்கு மூளைக்குள் அலாரம் அடித்தது போல் தோன்றிய தமிழ் ராக்கர்ஸ். புதிய படங்களை அனைத்தையும் அதே நாளில் லீக் செய்வதையே வாடிக்கையாக கொண்டுள்ள தமிழ்ராக்கர்ஸ், சர்கார் படத்துக்கும் இதையே செய்ய தயங்க மாட்டார்கள் என்பதால் சன் பிக்சர்ஸ் நீதிமன்றத்தை நாடியது.

Sarkar – Tamilrockers Controversy: சர்கார் படத்திற்கு சவால் விடும் தமிழ் ராக்கர்ஸ்

இப்படத்தை இணையத்தில் வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில், சன் பிக்சர்ஸ்-க்கு ஆதரவான உத்தரவை அளித்தது சென்னை உயர்நீதிமன்றம். ஏற்கனவே பாக்யராஜ் கதை சொல்லிவிட்டார் என்ற கலக்கத்தில் இருக்கும் படக்குழுவுக்கு தமிழ்ராக்கர்ஸ் நினைவுகள் திகிலூட்டத் தொடங்கியது. ஆனால் நீதிமன்றத்தின் ஆதரவு உத்தரவிற்குப் பிறகு பெரும்மூச்சு விட்டனர் சன் பிக்சர்ஸ்.

உனக்கு முன்னாடி நான் ஆப்பு வைக்கிறேன்… தமிழ் ராக்கர்ஸை முந்திக்கிட்ட சன் பிக்சர்ஸ்

அப்போது தான், தமிழ் ராக்கர்ஸ் என்று குறிப்பிடப்பட்டிருக்கும் ட்விட்டர் பக்கத்தின் மூலம் புதிதாக ஒரு சவால் எழுந்துள்ளது. அந்த ட்விட்டர் பக்கத்தில், ‘சர்கார் ஹெச்.டி பிரிண்ட் விரைவில் வருகிறது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சன் பிக்சர்ஸ் மட்டுமின்றி, பல தொழிலாளர்களி உழைப்பை மண்ணோடு மண்ணாக்க துடிக்கும் இணையத்தளங்களின் நடவடிக்கைகளில் இருந்து சர்கார் காப்பாற்றப்படுமா? நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் ஆகியவை இதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப் போகின்றன?

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Entertainment news in Tamil.

×Close
×Close