/tamil-ie/media/media_files/uploads/2019/09/siva-and-vijay.jpg)
Rajya Sabha MP Sasikala Pushpa, If Dare Vijay compete to Sivakarthikeyan, Actor Vijay, சசிகலா புஷ்பா எம்.பி, சிவகார்த்திகேயன், விஜய், Actor Sivakarthikeyan, Super Star Rajinikanth, Who is next Super Star
Vijay Vs Sivakarthikeyan: பிரபல அரசியல்வாதி மாநிலங்களவை எம்.பி சசிகலா புஷ்பா “விஜய்க்கு துணிச்சல் இருந்தால் சிவகார்த்திகேயன் படங்களோடு ரிலீஸ் செய்து மோதட்டும் பார்க்கலாம்” என்று கூறியுள்ளார்.
அண்மையில், ஊடகங்களுக்கு பேட்டி அளித்த நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் “யார் யாரோ அரசியலுக்கு வருகிறார்கள். நடிகர் விஜய் அரசியலுக்கு வர வேண்டும். நடிகர் ரஜினிக்கு அடுத்த நிலையில் விஜய்தான் இருக்கிறார்” என்று கூறினார்.
கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக உள்ள ரஜினிகாந்த் இன்னும் படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். இந்நிலையில், ரஜினியின் சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை பெற்றுவிட வேண்டும் என்று நட்சத்திர நடிகர்கள் முயற்சிக்கின்றனர். அவர்களுடைய ரசிகர்களும் தங்கள் நாயகனை சூப்பர் ஸ்டாராகவே கருதி கொண்டாடிவருகின்றனர்.
அகம் டிவி அரசியல்: கமல்ஹாசன் எடுக்கும் புது பரிணாமங்கள்
அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்று அஜித், விஜய் ரசிகர்களிடையே அவ்வப்போது போட்டி ஏற்படுவதை சமூக ஊடகங்களில் காண முடிகிறது. இவர்களுடைய ரசிகர்கள் தங்கள் நாயகனைப் பற்றி டுவிட்டரில் ட்ரெண்டிங் செய்வது சமீப காலமாக நடந்துவருகிறது.
இந்நிலையில், சர்ச்சைகளை ஏற்படுத்திய பிரபல அரசியல்வாதி மாநிலங்களவை எம்.பி சசிகலா புஷ்பா ஒரு வார இதழுக்கு அளித்த பேட்டியில், சினிமா தொடர்பான எந்த பின்புலமும் இல்லாமல் சாதாரண குடும்பத்தில் பிறந்து சின்னத்திரை, வெள்ளித்திரையில் சாதித்து சூப்பர் ஸ்டார் இடத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பவர் சிவகார்த்திகேயன். விஜய்க்கு துணிச்சல் இருந்தால் சிவகார்த்திகேயன் படத்தோடு ரிலீஸ் செய்து போட்டி போட சொல்லுங்கள் பார்க்கலாம். வசூலில் யார் கில்லி என்று தயாரிப்பாளர் கூறிவிடுவார்கள். ரஜினிகாந்துக்கு அடுத்து யார் சூப்பர் ஸ்டார் என்ற கேள்வி வந்தால் காலம் சிவகார்த்திகேயனை அடையாளம் காட்டும்” என்று கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.