Tamil Serial News : செம்பருத்தி சீரியலில் ஆதிக்கு தங்கை மித்ராவுடன்தான் கல்யாணம் நடக்க வேண்டும் என்று நந்தினி தனது தங்கை மித்ராவை டிரெயின் பண்ணி இருந்தாள். ஆனால், கடைசியில் கல்யாணம் நடக்கும்போது மித்ரா நாகபுரி வம்சத்தை சேர்ந்த நந்தினியின் தங்கை என்று தெரிந்து கல்யாணம் நின்னு போச்சு. இது ஒரு புறம்.. இந்த சமயத்தில் ஆதி, தான் பார்வதியை கல்யாணம் செய்துக்கொண்ட விஷயத்தை தனது அம்மாவான அகிலாண்டேஸ்வரி அம்மாவிடம் சொல்லி விடுகிறான்.
டெபிட் கார்டை மறந்துட்டீங்களா…? கவலைப்படாதீங்க… ஏ.டி.எம்-ல் பணம் எடுக்க வழி இருக்கு!
இதில் ஷாக்கானவங்கதான் அகிலாண்டேஸ்வரி... உடம்பு சரியில்லாம ரூமை விட்டு வெளியில் வருவதை நிறுத்துக்கிட்டாங்க. அகிலாண்டேஸ்வரி அம்மாவா நடிகை பிரியா ராமன் செம கெத்து கட்டி நடிச்சு இருக்காங்க. கொஞ்சம் அவங்களை ஃப்ரீயா விட்டு இருக்காங்க போல இருக்கு. அதே மாதிரி ஆதியா நடிச்சு இருக்கும் கார்த்திக்.. இவருக்கு பொண்ணுங்க மத்தியில் நல்ல கிரேஸ் இருக்கு. கிராமத்தில் வயசு பெண்கள், குடும்ப பெண்கள் என்று இவருக்கு ஃபேன்ஸ்...
ஆதி, பார்வதி ரொமான்ஸ் பெரிசா ஒன்னும் இருக்காது.. பார்வதி எதாவது மனசு கஷ்டத்தில் இருப்பா.. அப்போ அவளுக்கு புத்திமதி... ஆறுதல்.. என்று எதாவது சொல்லுவான் ஆதி. இதுக்குத்தான் மாமா நீங்க என் பக்கத்துல இருக்கணும்னு சொல்றதுன்னு ஒரு சமயம் சொல்வா பார்வதி. இன்னொரு சமயம்.. நீங்க இந்த சூழ்நிலையில் எனக்கு என்ன அறிவுரை சொல்வீங்கன்னு நினைச்சு பார்த்தேன்.. சமாதானம் ஆயிட்டேன் மாமான்னு சொல்லுவா.
மாஸ்க், கை சுத்தமாக்கும் மருந்து; அத்தியாவசியப் பொருட்களாக அறிவிக்கப்பட்டது ஏன்?
அதுவும் இல்லையா...மாமா.. நீங்க இந்த கஷ்டத்தில் எப்படி முடிவு எடுப்பீங்கன்னு நினைச்சு அந்த முடிவை எடுத்தேன் மாமான்னு சொல்லுவா பார்வதி. ஆதி சிரிப்பான். பின்னர் அவள் சொல்லி வச்சது போல இரண்டு கையை நீட்டி அவனை கட்டிக்க வருவா. இவனும் கட்டிக்கொள்வான்.. அப்புறம் ஒரு பாட்டை போட்ருவாங்க. இதுதான் ரொமான்ஸ்.. இதுக்கு காத்துக் கிடக்கும் ரசிகர்கள் ஏராளம். இப்போ கொஞ்ச நாளா அது இல்லையாம். வருத்தத்தில் இருக்காங்க ரசிகர்கள்.