Advertisment

டிவி நிகழ்ச்சியில் தனது ஃபோட்டோவைப் பார்த்து கடுப்பான ஷாலு ஷம்மு: பாதியில் பை பை

சினிமாவில் படு ஹோம்லியாக நடிக்கும் அவரின் இன்ஸ்டாகிராம் அதற்கு மாறாக இருக்கும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Shalu Shamu, Z tamil show

Shalu Shamu, Z tamil show

தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சீரியல்களைப் போலவே அதன் ரியாலிட்டி ஷோக்களுக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இசை, நடனம், நகைச்சுவை, சமையல் என திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக ஒவ்வொன்றுக்கும் தனித்தனியான நிகழ்ச்சிகள், எல்லா சேனல்களிலும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

Advertisment

2 வயது குழந்தையை விட்டு விட்டு சீரியல் நடிகை தற்கொலை

அந்த வகையில் ஜி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் காமெடி ஷோ, ’காமெடி கேங்ஸ்டர்ஸ்’. வாரந்தோறும் ஞாயிறு மதியம் 1 மணிக்கு இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சியில் சினிமா துணை நடிகை ஷாலு ஷம்மு கலந்துக் கொண்டார். சினிமாவில் படு ஹோம்லியாக நடிக்கும் அவரின் இன்ஸ்டாகிராம் அதற்கு மாறாக இருக்கும். சினிமாவில் நடித்ததை விட, இன்ஸ்டாகிராம் படங்களால் அறியப்பட்டவர் என்ற பெருமையும் ஷாலுவையே சேரும்.

இது வேற லெவல் என்ட்ரி… ஐ.பி.எல்-ல் மரண மாஸ் காட்ட சென்னை வந்த தோனி!

இது ஒருபுறமிருக்க, காமெடி கேங்க்ஸ்டர் நிகழ்ச்சியில், ஷாலு ஷம்மு இன்ஸ்டாகிராமில் பதிவிடும் படங்கள் ஸ்கிரீனில் திரையிடப்பட்டது. அந்த போஸை அப்படியே போட்டியாளர்கள் செய்து காட்டுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டது. முதலில் சில படங்களை இமிடேட் செய்யும் போது அமைதியா இருந்த ஷாலு அடுத்து வந்த படத்தைப் பார்த்ததும், அதிர்ச்சியானார். ரோஜா இதழ்களை உடல் மீது போட்டுக் கொண்டு, படு கவர்ச்சியாக அவர் எடுத்திருத்த படம் திரையிடப்பட்டது. இதையும் போட்டியாளர்கள் செய்துக் காட்ட, “மத்த ஃபோட்டோஸ் ஓகே, இந்த படம் எதுக்கு? இது தேவையே இல்லாத படமாச்சே” என்றவாரு மேடையை விட்டு வெளியேறினார். “இது எனக்கு சர்ப்ரைஸாக இல்ல, ஒரு ஆர்டிஸ்ட்ட கூட்டிட்டு வந்து இப்படித்தான் பண்ணுவீங்களா” என சீறினார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்"

Tv Show
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment