பிக்பாஸ் மூன்றாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்ட நடிகை ஷெரின், சக போட்டியாளர் தர்ஷனை விரும்புவது போன்று ஆடியன்ஸுக்கு காட்டப்பட்டது. தர்ஷனுக்கு வெளியில் ஒரு காதலி இருக்கிறார் என்பது தெரிந்தும், ஷெரின் அவரை ஒருதலையாக காதலித்தது போன்று காட்சிகள் இடம் பெற்றிருந்தன.
Advertisment
ஆனால், பிக்பாஸ் முடிந்த பிறகு தர்ஷனுக்கும் அவரது ரியல் காதலியான சனம் ஷெட்டிக்கும் முட்டிக் கொள்ள, போலீஸ் வரை சென்றது பஞ்சாயத்து. தர்ஷன் மீது சனம் புகாரளிக்க, சனம் மீது தர்ஷன் புகார் கடிதம் வாசித்தார்.
இதில் இடையில் சிக்கியவர் ஷெரின். ஏனெனில், சனம் மீது தர்ஷன் சுமத்திய குற்றச்சாட்டில் மிக முக்கியமானது, ஷெரினுடனான எனது நட்பை சனம் சந்தேகிக்கிறார். எனது மொபைலை எனக்கு தெரியாமலேயே எடுத்து பார்க்கிறார். நானும், ஷெரினும் இதனால் பேசுவதே இல்லை என்று கூறியது தான்.
Advertisment
Advertisement
இந்நிலையில், ஷெரின் தனது இன்ஸ்டா பக்கத்தில் நீண்ட கடிதம் ஒன்றை தீட்டியுள்ளார். இதில், தர்ஷன், சனம் பிரிவு குறித்து மறைமுகமாக தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.
அதில், "கடந்த ஒரு மாதமாக நிறைய பேசப்பட்டுவிட்டது. யாராவது என்னைத் தாக்க வேண்டும் என்றால் தாராளமாக செய்யுங்கள், அதற்கு நான் கையெழுத்து போட்டு தருகிறேன். நீங்கள் என்னை மோசமான பெயர்களால் அழைப்பதை நான் சிரிப்புடன் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் இதில் இருந்து என் குடும்பத்தை விட்டுவிடுங்கள். போலி அக்கவுண்டிகளில் மறைந்து கொண்டு அவர்களை வசைபாடுவதையும் ட்ரோல் செய்வதையும் ஏற்க முடியாது.
யாரோ செய்த தவறுக்காக என்னை பழி சொல்வது, எனக்கு குற்ற உணர்ச்சியை ஏற்படுத்தாது. உங்களின் குறுகிய மனப்பான்மையும் குறுகிய பார்வையும் தான் வெளிப்படுகிறது. மற்றவர்கள் மீது முறையாக குறை சொல்ல கற்றுக் கொள்ளுங்கள். நான் அமைதியாக இருப்பதை என்னுடைய பலவீனமாக நினைக்க வேண்டாம். நான் இந்த விவகாரத்தில் நான் இல்லாததால் எதுவும் பேசாமல் இருக்கிறேன்.
2 பேர் பிரேக் அப் செய்து கொள்வதை விடவும் பெரிய பிரச்சனைகள் இந்த உலகத்தில் உள்ளது. எனக்கு ஆதரவாய் நின்ற அனைத்து ஆதரவாளர்களுக்கும் நன்றி. தவறான கமென்ட்ஸ்களுக்கு பதிலளிக்க வேண்டாம் என நான் கேட்டுக் கொள்கிறேன். மக்கள் கோபமாக இருக்கிறார்கள். என்னுடைய கமென்ட் செக்ஷனில் கொட்டித்தீர்ப்பது அவர்களுக்கு அமைதியை கொடுக்கும் என்றால் அவர்கள் செய்யட்டும்.
இதுதொடர்பான கேள்விகளுக்கும் ரியாக்ஷன்களுக்கும் இனிமே இதுபோன்று நான் பதில் சொல்ல மாட்டேன்" என்று ஷெரின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”