பிக் பாஸ் ப்ரோமோவா இது? ஷிவானி நாராயணன் குவாரன்டைன் டான்ஸ்

சூரரைப் போற்று படத்தில் இடம் பெற்ற காட்டுப்பயலே பாடலுக்கு நடனமாடி அசத்தியுள்ளார் ஷிவானி.

By: September 29, 2020, 9:48:39 PM

பிரபல தமிழ் நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 4 வரும் அக்டோபர் 4 முதல் ஒளிபரப்பாகிறது. இதில், கலந்து கொள்ள இருப்பதாக எதிர்பார்க்கப்படும் விஜய் டிவி சீரியல் நடிகை  ஷிவானி தன்னை குவாரண்டைன் செய்துகொண்துள்ளார்.

நடிகை ஷிவானி ‘சரவணன் மீனாட்சி சீசன் 3’ நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமானவர்.  இவர், சினேகா அர்ஜுனாக ‘பகல் நிலவு’ சீரியலில் தனது நடிப்பால் புகழ் பெற்றார். ‘கடைகுட்டி சிங்கம்’, ‘ரெட்டை ரோஜா’ ஆகிய சீரியல்களிலும் நடித்து ரசிகர்களின் ஆதரவைப் பெற்றவர்.  இவர், அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் அக்கவுண்டில் கவர்ச்சியான படங்களை வெளியிட்டு ரசிகார்களின் மனதை கொள்ளை கொண்டு வருகிறார்.

முன்னதாக,  தனுஷ், சாய் பல்லவி நடிப்பில், யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்த ‘மாரி 2’ படத்தில் இடம் பெற்ற’ ரவுடி பேபி’ என்ற பாடலுக்கு ஷிவானி நடனமாடும் விடியோவை தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவிட்டிருந்தார்.    ‘

 

 

 

View this post on Instagram

 

Kaatu Payale ❤️

A post shared by Shivani Narayanan (@shivani_narayanan) on

 

 

இந்நிலையில், நடிகர் சூர்யா நடிப்பில் விரைவில்  வெளியாக  இருக்கும் சூரரைப் போற்று படத்தில் இடம் பெற்ற காட்டுப்பயலே பாடலுக்கு நடனமாடி அசத்தியுள்ளார்.  இந்த வீடியோ சில மணி நேரங்களிலே பல்லாயிரக்கணக்கான மக்கள் பார்வையிட்டனர்.

பிக் பாஸ் 4 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் மற்றொரு போட்டியாளரான ரம்யா பாண்டியனும் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Shivani narayanan soorarai pottru kaatu payale video went viral

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X