Advertisment

அதிதி மேனன் கழுத்தில் தாலி கட்டும் அபிசரவணன்... எது தான் உண்மை?

author-image
WebDesk
Feb 23, 2019 11:43 IST
abi saravanan - adithi menon, அபிசரவணன்

abi saravanan - adithi menon, அபிசரவணன்

நடிகை அதிதி மேனன் கழுத்தில் நடிகர் அபிசரவணன் தாலி கட்டும் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. சமூக வலைத்தளம் முழுவதும் பரபரப்பை கிளப்பியிருக்கிறது.

Advertisment

புதுமுக நடிகர் அபிசரவணனுடன் தனக்கு திருமணம் நடந்து விட்டதாக அவதூறு பரப்பபடுகின்றது என்று காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகை அதிதி மேனன் புகார் அளித்திருந்த நிலையில் அதிதி கழுத்தில், நடிகர் அபிசரவணன் தாலிகட்டும் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.

களவானி மாப்பிள்ளை படத்தில் நடித்துள்ள கேரளாவை சேர்ந்த நடிகை அதிதிமேனன், இவரும் மதுரையை சேர்ந்த அபி சரவணன் என்ற நடிகரும் காதலித்து திருமணம் செய்து கொண்டதாக கூறப்பட்டது.

இவர்களின் திருமணம் பதிவு செய்யப்பட்ட நிலையில் நடிகை அதிதி, சுஜித் என்ற இளைஞருடன் சென்று விட்டதாக தகவல் பரவியது. இது தொடர்பாக காவல் ஆணையரகத்தில் புகார் அளித்த அதிதி, தனக்கு திருமணம் ஆனதாக அவதூறு பரப்பப்படுகின்றது என்றும் அபி சரவணனை காதலித்து பிரிந்து விட்டதாகவும் விளக்கம் அளித்தார். மேலும் அபி சரவணன் நிவாரண பணத்தில் முறைகேடு செய்ததாகவும் குற்றஞ்சாட்டினார்.

அபிசரவணன் தாலிகட்டும் வீடியோ

இதையடுத்து காவல் ஆணையரகத்தில் தன் மீதான புகாருக்கு நடிகர் அபி சரவணன் மறுப்பு தெரிவித்து விளக்கம் அளித்துள்ளார். தனக்கும் அதிதிக்கும் நடந்த திருமணத்தின் போது அதிதியால் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றையும் ஆதாரமாக கொடுத்துள்ளார்.

தமிழக அரசின் இணையதளத்தில் தாங்கள் இருவரும் தம்பதிகள் என பதிவு செய்யப்பட்ட ஆதாரத்தையும் அபி சரவணன் வழங்கினார். அதோடு இல்லாமல் ஜல்லிகட்டு, கேரள வெள்ளம், மற்றும் கஜா புயல் நிவாரண பணிகளை தனது சொந்த பணத்தில் இருந்து செய்ததாக அபி சரவணன் விளக்கம் அளித்தார்.

மேலும் அண்மையில் அதிதிமேனன், சுஜித் உடன் ஒன்றாக சுற்றி திரிவதை படம் பிடித்த தனது நண்பரை நடிகை அதிதிமேனன் தாக்கினார் என்று அது தொடர்பாக வீடியோ காட்சி ஒன்றை அபி சரவணன் வெளியிட்டார்.

போலி திருமணப் பதிவு சான்று தயாரித்து மிரட்டுகிறார் : பிரபல நடிகர் மீது நடிகை அதிதி மேனன் புகார்

அதிதிமேனனுக்கு அடுத்தடுத்து புதிய படவாய்ப்புகள் கிடைத்ததால் அவர் ரகசிய திருமணம் செய்த அபி சரவணனை விட்டு விலகிச்சென்றுவிட்டதாக கூறப்படும் நிலையில் இவர்களது வழக்கை குடும்ப நல நீதி மன்றத்தில் சென்று தீர்த்து கொள்ள காவல்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

#Aditi Menon #Chennai #Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment