Advertisment
Presenting Partner
Desktop GIF

'நான் பெண்ணியவாதியாக மாறக் காரணம் அந்த சம்பவமே' - நடிகை ஸ்ரத்தா ஶ்ரீநாத்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Shraddha Srinath feminist, tamil cinema news, ஸ்ரத்தா ஶ்ரீநாத், சினிமா செய்திகள், தமிழ் சினிமா, கோலிவுட் சினிமா, சினிமா, latest tamil cine news

Shraddha Srinath feminist, tamil cinema news, ஸ்ரத்தா ஶ்ரீநாத், சினிமா செய்திகள், தமிழ் சினிமா, கோலிவுட் சினிமா, சினிமா, latest tamil cine news

தமிழில் 'இவன் தந்திரன்' படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை

target="_blank" rel="noopener noreferrer">ஸ்ரத்தா ஶ்ரீநாத். மணிரத்னம் இயக்கிய 'காற்று வெளியிடை' படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார்.

Advertisment

மாதவன், விஜய்சேதுபதி நடித்த 'விக்ரம் வேதா' இவருக்கு திருப்புமுனை படமாக அமைந்தது. பிறகு ரிச்சி, கே 13, அஜித்தின் 'நேர்கொண்ட பார்வை' படங்களில் நடித்தார். தெலுங்கு படங்களிலும் நடித்து வரும் ஸ்ரத்தா ஶ்ரீநாத், இப்போது, விஷால் நடிக்கும் சக்ரா படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

இயக்குனர் விஜய் தம்பதிக்கு குழந்தை பிறந்தது - பிரபலங்கள் வாழ்த்து

லாக்டவுன் காரணமாக வீட்டில் இருக்கும் நடிகை ஸ்ரத்தா ஶ்ரீநாத், சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பவர். அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவிடும் அவர், தான் எப்போது பெண்ணியவாதியாக மாறினேன் என்று இன்ஸ்டாகிராமில் கூறியுள்ளார். அதை நெட்டிசன்கள் பலர் வரவேற்றுள்ளனர்.

அதில் அவர் கூறியிருப்பதாவது: கவலையோடு சொன்னேன் அப்போது எனக்கு 14 வயது. குடும்ப பூஜை ஒன்று நடந்து கொண்டிருந்தது. திடீரென்று எனக்கு மாதவிடாய். அருகில் அம்மா இல்லை. என் அத்தைக்கு அருகில் சென்று அமர்ந்தேன். என்னிடம் சானிடரி பேட் இல்லை. விஷயத்தை கவலையோடு சொன்னேன். அருகில் இருந்த இன்னொரு பெண், என் கவலையைக் கண்டு சொன்னார், 'மாத விடாய் நேரத்தில் பூஜையில் இருந்ததற்காகக் கவலைப்படாதே, குழந்தை. கடவுள் உன்னை மன்னிப்பார்' என்று.

data-instgrm-version="12">

 

View this post on Instagram

 

target="_blank" rel="noopener noreferrer">I was 14. At a family pooje, I got my period. I was not accompanied by my mom, so I nudged my aunt sitting next to me and worriedly informed her of it (because I was not carrying a sanitary pad). Another good natured lady sitting close, saw me worried and overheard me and said to me, smiling reassuringly, “Parvagilla chinna, devaru kshamistaare/ don’t worry child, God will forgive you” (for being part of the Pooja while menstruating). That’s the day I became a feminist and a non believer. I was 14.

A post shared by Shraddha Srinath (@shraddhasrinath) on

அப்போதிருந்துதான் பெண்ணியவாதியாக மாறினேன். நம்பிக்கை அற்றவளாகவும் ஆனேன் என்று தெரிவித்துள்ளார். இதற்கு ஏராளமான ரசிகர்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர். ஸ்ரத்தா இந்த கருத்து ரசிகர்களிடையே அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

வழக்கம் போல் ஆதரவும், எதிர்ப்பும் கலந்து ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Shraddha Srinath
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment