Shruti Haasan : நடிகை ஸ்ருதிஹாசன் உடல் பற்றிய எதிர்மறை எண்ணங்களை ஊக்குவித்து, தான் சந்தித்த போராட்டங்களைப் பற்றி இன்ஸ்டாகிராமில் தெரிவித்திருக்கிறார். ஒரு நீண்ட போஸ்டில், பிளாஸ்டிக் சர்ஜரி பற்றியும் குறிப்பிட்டுள்ள அவர் அதை விளம்பரப்படுத்தவில்லை, இருப்பினும் பிளாஸ்டிக் சர்ஜரிக்கு எதிரானவர் அல்ல ஸ்ருதி.
குடியாத்தம் தி.மு.க. எம்.எல்.ஏ காத்தவராயன் மரணம்… திமுகவில் தொடரும் சோகம்
இது வரை தனது உடலைப் பற்றி யாரும் கிண்டல் செய்ததில்லை, என்பதால் அதனை தவிர்த்த ஸ்ருதி இப்படி தொடங்கினார், “ஸோ…. எனது பதிவுக்குப் பிறகு இதனை பதிவிட முடிவு செய்தேன், அதற்கான காரணத்தை நான் உங்களுக்கு சொல்கிறேன். நான் என்னைப் பற்றிய மற்றவர்களின் கருத்துக்களால் பாதிக்கப்பட்டவள் அல்ல, ஆனால் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கிறேன். அவள் மிகவும் குண்டாக இருக்கிறாள், இவள் ரொம்ப ஒல்லியாக இருக்கிறாள் போன்ற கமெண்டுகள் தவிர்க்க முடியாதவைகளாகி விட்டன.
இந்த இரண்டு படங்களும் மூன்று நாட்கள் இடைவெளியில் எடுக்கப்பட்டவை. நான் என்ன சொல்லப் போகிறேன் என்பதை புரிந்துக் கொள்ளும், பெண்கள் அங்கே இருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும். பெரும்பாலும் நான் என் ஹார்மோன்களின் கருணையுடன் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் ஆரோக்கியமாக இருக்கிறேன். பல ஆண்டுகளாக நான் அதனுடன் ஆரோக்கியமான உறவைக் கொண்டுவருவதற்கு முயற்சி செய்கிறேன். இது எளிதானது அல்ல. வலி சுலபமல்ல, உடல் மாற்றங்கள் சுலபமல்ல, ஆனால் என் பயணத்தைப் பகிர்ந்து கொள்வது எளிது.
யாராக இருந்தாலும் அவர் புகழ்பெற்றவராக இருந்தாலும் இல்லையென்றாலும் இன்னொருவர் பற்றித் தீர்ப்பளிக்கும் நிலையில் இல்லை என்பதை நினைவூட்ட விரும்புகிறேன். இதுதான் என் வாழ்க்கை. இதுதான் என் முகம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறேன்.
ஆம்! நான் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டேன். இதனை ஒப்புக்கொள்வதில் எனக்கு எந்த வெட்கமும் இல்லை. நான் இதனை விளம்பரப்படுத்துகிறேனா? இல்லை, நான் அதற்கு எதிரானவரா இல்லை. இப்படிப்பட்ட வாழ்வதைத்தான் நான் தேர்ந்தெடுத்துள்ளேன். நமக்கு நாமே செய்துகொள்ளக் கூடிய சாதகம் என்னவெனில் நம் உடல், மனம் ஆகியவற்றின் இயக்கத்தையும் மாற்றங்களையும் ஏற்றுக்கொள்ள கற்றுக் கொள்வதே, அன்பைப் பரப்புங்கள். நான் ஒவ்வொரு நாளும் என்னை நேசிக்க கற்றுக்கொண்டு வருகிறேன், என்னைப் பொறுத்தவரை கூடுதல் நேசம் தேவைப்படுவதன் காரணம் என் வாழ்க்கையின் மிகப்பெரிய காதல் கதை என்னிடம் இருக்கிறது. இது உங்களுக்குமானது என்று நம்புகிறேன்” என்று அந்தப் பதிவை முடித்துள்ளார்.
சூப்பர் சிங்கர் ஜூனியர்: நிகழ்ச்சி ஆரம்பிக்கும் முன்பே சந்திரபாபு பாடலால் வைரலான போட்டியாளர்
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்"