ரங்கா ராவ் - பானுமதி நடித்த ’அன்னை’ என்ற படத்தில் ‘புத்தியுள்ள மனிதரெல்லாம்’ என்ற பாடலை நடிகரும், பாடகருமான சந்திரபாபு பாடியிருப்பார். இந்தப் பாடல் இன்றளவும் ரசிகர்களால் பெரிதும் விரும்பப்படுகிறது. தற்போது இந்தப் பாடலை ஒரு சிறுவன் பாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இன்றைய செய்திகள் Live : விருதுநகர், ராமநாதபுரத்தில் புதிய மருத்துவக் கல்லூரிகள்… 1ம் தேதி அடிக்கல் நாட்டுகிறார் முதல்வர்
பள்ளி வகுப்பறைக்குள் அந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. பாடலைப் பாடிய மாணவனின் பெயர் க்ரிஷாங் எனத் தெரிய வந்திருக்கிறது. மகிழ்ச்சியாக பாடும் க்ரிஷாங்கின் குரலில் உற்சாகமும், அவரின் தெளிவான உச்சரிப்பும் பார்வையாளர்களை ஈர்க்கிறது. அதோடு சந்திரபாபுவைப் போல தனித்துவமான மாடுலேஷன்களுடன் க்ரிஷாங் பாடுவது, பலரையும் கவர்ந்துள்ளது. நேற்று முதல் இணையத்தில் வலம் வரும் இந்த வீடியோவுக்கு பயனர்கள் மத்தியில் பெரும் பாராட்டைப் பெற்று வருகிறது.
வீடியோவைப் பகிர்ந்து க்ரிஷாங்கின் பாடலைப் பாராட்டியவர்களில், இசையமைப்பாளர் எஸ்.தமன், இந்த சிறுவன் ’எதிர்கால சங்கர் மகாதேவன்’ என்று கூறினார். அதோடு சிறுவனுக்கு சிறந்த பயிற்சியை தருமாறு அவனின் பெற்றோர்களைக் கேட்டுக் கொள்கிறேன் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
வீடியோ வைரலாகி வந்ததைத் தொடர்ந்து, விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் ஜூனியர் புதிய சீசனின் போட்டியாளர் தான் க்ரிஷாங் என கண்டுப் பிடித்தனர் நெட்டிசன்கள். 19 இளம் போட்டியாளர்களுடன் பங்கேற்க அந்த சிறுவன் தேர்வு செய்யப்பட்டிருக்கிறான்.
பெண் பாதுகாவலருடன் இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஜெமிமா ஆடிய மாஸ் டான்ஸ் – வைரல் வீடியோ
நாளை முதல் தொடங்கும் இப்போட்டியில், மற்றொரு போட்டியாளருடன் இணைந்து ’என்னாமா கண்ணு செளக்கியமா’ என்ற பாடலைப் பாடுகிறார் கிரிஷாங். இந்த முறை சூப்பர் சிங்கரின் நடுவர்களாக, பாடகர்கள் சங்கர் மகாதேவன், சித்ரா, கல்பனா மற்றும் நடிகர்-பாடகர் நகுல் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்"