பெண் பாதுகாவலருடன் இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஜெமிமா ஆடிய மாஸ் டான்ஸ் – வைரல் வீடியோ

ஜெமிமாவின் அந்த ஆட்டத்தை இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின், ஆஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜேஸன் கில்லஸ்பி, ஆகியோர் பாராட்டியுள்ளனர்.

By: Updated: February 28, 2020, 09:26:50 AM

Jemimah Rodriguez : இந்திய அணி வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ், பெண் பாதுகாவலருடன் இணைந்து ஆடிய நடனத்தின் வீடியோ, சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.

திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் கவலைக்கிடம்: அப்பல்லோவில் தீவிர சிகிச்சை

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவில்,  ’20-20′ உலக கோப்பை தொடரில் விளையாடி வருகிறது. இதில் ‘மிடில் ஆர்டர்’ வீராங்கனையாக உள்ளார் ஜெமிமா ரோட்ரிக்ஸ். இவர் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் விளையாடும் போது, மைதானத்துக்கு செல்லும் வழியில் பெண் பாதுகாவலருடன் இணைந்து இந்தி பாடலுக்கு நடனமாடினார்.

அந்த வீடியோவை ஐசிசி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. ஜெமிமாவின் அந்த ஆட்டத்தை இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின், ஆஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜேஸன் கில்லஸ்பி, ஆகியோர் பாராட்டியுள்ளனர்.

தவிர, இதுவரை இந்திய அணி மூன்று டி-20 போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில் ஆஸ்திரேலியா, வங்கதேசம், நியூசிலாந்தை வென்று, 6 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. குறிப்பாக இந்திய அணியின் தொடக்க வீரர் ஷபாலி சர்மா இந்தத் தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடி வருகிறார்.

Rasi Palan 28th February 2020: இன்றைய ராசிபலன்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Sports News by following us on Twitter and Facebook

Web Title:Indian cricket player jemima rodriguez dance with security guard

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X