Shruti Haasan : நடிகை ஸ்ருதி ஹாசன் கடைசியாக சூரியா நடித்த 'சிங்கம் 3’ படத்தில் நடித்தார். அதன் பிறகு நடிப்புக்கு சிறிது இடைவெளி விட்டிருந்த அவர், தற்போது ‘லாபம்’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தை இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கிக் கொண்டிருக்கிறார்.
சமீபத்தில் ’தேவி’ என்ற குறும்படத்தில் நடித்த ஸ்ருதி ஹாசன் டோலிவுட்டிலும் பிரபலமானவர். தெலுங்கில் சிறந்த முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். தற்போது ’வக்கீல் சாப்’ என்ற பெயரில் ’பிங்க்’ திரைப்படம் ரீமேக்காகிறது. அந்தப் படத்தில் ஸ்ருதி ஹாசன் இடம் பெற்றிருப்பதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Advertisment
Advertisements
நடிகர் பவன் கல்யாண் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ருதி நடிப்பார் என்று தெரிகிறது. பாலிவுட்டில் பெரும் வெற்றி பெற்ற, ‘பிங்க்’ திரைப்படம் ’நேர்கொண்ட பார்வை’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு தமிழில் வெளியானது. இதில் நடிகை வித்யா பாலன் நடித்த பாத்திரத்தை தான் ஸ்ருதி ஏற்றிருக்கிறாராம். ’வக்கீல் சாப்’ படத்தை வேணு ஸ்ரீராம் இயக்க, நிவேதா தாமஸ், அஞ்சலி மற்றும் அனன்யா நாகல்லா முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.