Ilayaraaja – Kamal Haasan Combo : சீனாவில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரஸால் உலகலவில் 1 லட்சத்து 30,000 பேருக்கு மேல் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் இந்நோய் குறித்த விழிப்புணர்வை மத்திய அரசு உத்தரவின் பேரில் அனைத்து மாநிலங்களிலும் ஏற்படுத்தி வருகின்றனர்.
’வாத்தி கம்மிங் ஒத்து’: ‘அரண்மனைகிளி’ மீனாட்சியம்மாவின் ‘மாஸ்’ டான்ஸ்!
இதனால் திரைத்துறையை சேர்ந்த பல்வேறு பிரபலங்களும் கடந்த சில நாட்களாகவே கொரோனா விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டு வருகின்றனர். அதோடு கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் பொருட்டு, ஊரடங்கு உத்தரவை மே 3-ம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதனால் 24 மணிநேரமும் வீட்டில் இருக்கும் பிரபலங்கள், புத்தகங்கள் படிப்பது, சமைப்பது, கார்டனில் வேலை செய்வது, நடனமாடுவது, விழிப்புணர்வு வீடியோ வெளியிடுவது என தங்களை பிஸியாக வைத்துள்ளனர். அந்தவகையில் நடிகை ஸ்ருதி ஹாசன், அவரது அப்பா கமல் ஹாசன் நடித்த நாயகன் படத்தில் இடம்பெறுள்ள “தென்பாண்டி சீமையிலே” பாடலை கீ போர்டில் வாசித்தவாறு பாடியிருக்கிறார். அந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கும் ஸ்ருதி ஹாசன், ’எப்போதும் எனக்கு மிகவும் பிடித்த பாடல்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.
அரசு ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ. 10 ஆயிரம் நிதி உதவி தர வேண்டும் – தயாநிதி மாறன்
மணிரத்னம் – கமல் ஹாசன் – இளையராஜா கூட்டணியில் உருவாகிய இந்த கேங்ஸ்டர் திரைப்படம் தமிழ் சினிமாவின் எவர் கிரீன் லிஸ்டில் முதன்மையான ஒன்று.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook
Web Title:Shruti haasan thenpandi cheemaiyile kamal haasan ilaiyaraaja nayagan