/tamil-ie/media/media_files/uploads/2019/12/a11-2.jpg)
sibi sathyaraj's walter teaser released - போலீஸ் யூனிஃபார்ம் கைக் கொடுத்ததா? - சிபி சத்யராஜின் 'வால்டர்' டீசர் வெளியீடு
தமிழ் சினிமாவில் ஒருவர் மக்கள் கொண்டாடும் ஹீரோவாக மாற வேண்டுமெனில், அவர் குறைந்தது ஒரு அதிரடி அக்ஷன் போலீஸ் படத்தில் நடித்தாக வேண்டும். இதை கிண்டலுக்காக கூறவில்லை. எதார்த்தம் இது தான். ரஜினியே இதை பரிசோதித்துப் பார்த்தவர் தான். ஆனால், காக்கிச் சட்டையை தாண்டிய மாஸ் அவரது கண்களுக்கு இருந்ததால், அப்போதைய ஆங்ரி யங் மேன் இதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
ஆனால், இதர தமிழ் ஹீரோக்கள் போலீஸ் உடை அணியாமல் தங்கள் மாஸ் பக்கங்களை எழுதுவதில்லை.
கலவர பூமியில் களம் இறங்குவாரா 'தல' : பிக்பாஸ் பிரபலம் கனவு நிறைவேறுமா?...
லேட்டஸ்ட்டாக அப்படி தன் பாணியை உருவாக்க துணிந்து இருப்பவர் சிபி சத்யராஜ். நாணயம் படத்துக்கு முன்பு, எங்கு இருந்தார் என தேடவேண்டி இருந்த சிபி, அதன்பிறகு தரமான ஸ்க்ரிப்ட்களை தேடிப் பிடித்து நடிக்க ஆரம்பித்து இருக்கிறார்.
சிபியின் படத்துக்கு நம்பி போகலாம்.. ஏதாச்சும் இருக்கும் என்ற பெயரை இந்த நொடி வரை சம்பாதித்து வைத்திருக்கிறார். அதன் அடுத்தக்கட்ட ஜம்ப் தான் வால்டர்.
யு.அன்பரசன் என்ற புதுமுகம் இயக்க அதிரடி ஆக்ஷன் போலீஸ் பாத்திரத்தில் சிபி நடித்திருக்கும் வால்டர் படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது.
மெடிக்கல் கிரைம் தான் இப்படத்தின் பிளாட். டீசரில் சில சீன்களில் சிபி உண்மையிலேயே மாஸாக தெரிவது பிளஸ்.
சிபியுடன் சமுத்திரக்கனி, நட்டி நட்ராஜ், ஷிரின், சார்லி, முனீஸ்காந்த், சனம் ஷெட்டி, ரித்விகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
வாழ்த்துகள் சிபி!!
தளபதி ரசிகர்களுக்கு 31ம் தேதி 5 மணிக்கே புத்தாண்டு பொறக்குதுங்கோ....
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.