Simbu Dance Video: தெலுங்கில் 2013-ஆம் ஆண்டு வெளியான படம் ‘அட்டாரிண்டிகி தாரேடி'. த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கியிருந்த இப்படத்தில் ஹீரோவாக பவன் கல்யாண் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்களிடையேவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று மெகா ஹிட்டானது. இப்படத்தின் தமிழ் ரீமேக்கான ‘வந்தா ராஜாவா தான் வருவேன்’ படம், சிம்புவை ஹீரோவாக வைத்து இயக்கப்பட்டது.
ஐஸ்வர்யா ராஜேஷ் முதல் ஷிகர் தவான் வரை ; சாத்தான்குளம் மரணங்களுக்கு நீதி கேட்டு குரல்
,
இந்தப் படத்தை ‘லைகா புரொடக்ஷன்ஸ்' நிறுவனம் தயாரித்தது. சுந்தர் சி இயக்கியிருந்த இந்தப் படத்தில், சிம்புவுக்கு ஜோடியாக ‘எனை நோக்கி பாயும் தோட்டா' புகழ் மேகா ஆகாஷ் நடித்திருந்தார். மேலும், முக்கிய வேடங்களில் பிரபு, கேத்ரின் தெரெசா, ரம்யா கிருஷ்ணன், மஹத் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு : ஏ.ஆர். ரஹ்மான், ஜி.வி. வீடியோ வெளியீடு!
ஹிப் ஹாப் தமிழா இசையமைத்த இந்தப் படத்தில் சதீஷ் கிருஷ்ணன் நடன இயக்குநராகப் பணியாற்றினார். தற்போது சதீஷ் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், இந்த படத்தில் சிம்புவுடன் பணியாற்றியதை நினைவுக் கூர்ந்துள்ளார். "என்ன இருந்தாலும் அவரோடு பணியாற்றுவது ஒரு தனி அனுபவம். நான் என்ன கோரியோகிராப் செய்தாலும் சில நொடிகளில் அதை எளிமையாக ஆடுவது அவருடைய இயல்பு” என்று தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது சிம்பு ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”