Simbu Eeswaran full movie Leaked Online: சுசீந்திரன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகிய ஈஸ்வரன் திரைப்படம் டெலிகிராம் மற்றும் பிற பைரசி வலைதளத்தில் வெளியாகி அதிர்ச்சி அளித்துள்ளது.
கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு திரையரங்குகளில் வெளியான மாஸ்டர் மற்றும் ஈஸ்வரன் ஆகிய இரண்டு திரைப்படங்களையும் பைரசி வலைதளங்கள் சட்டவிரோதமாக வெளியிட்ட சம்பவம் சினிமா வட்டாரங்களில் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
கிராமத்து கதைகளுக்கு பெயர்போன இயக்குநர் சுசீந்திரன் நடிகர் சிம்புவை வைத்து இயக்கியுள்ள படம் ஈஸ்வரன். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான இந்த படத்தில், கோவில் படத்திற்கு பிறகு சிம்பு கிராமத்து வேடத்தில் நடத்துள்ளதால் பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது. மேலும் கோலிவுட்டில் பெரும் சர்ச்சைகளை சந்தித்த சிம்பு குறுகிய கால தயாரிப்பாக இந்த படத்தில் நடித்துள்ளார்.
http://மாஸ்டர் Vs ஈஸ்வரன் சிறந்த படம் எது ? வலைதளங்களில் ஒப்பிடும் ரசிகர்கள்
திண்டுக்கல்லுக்கு அருகே உள்ள கிராமத்தில் அனைவரும் மதிக்கத்தக்க மனிதர் பெரியசாமி (பாரதிராஜா). மனைவியை இழந்த இவர், தனது பிள்ளைகளுக்கு நல்ல அப்பாவாக இருந்து வளர்த்து வருகிறார். ஒரு கட்டத்தில் பிள்ளைகள் வளர்ந்து அவரவர் தனித்தனியான சென்றுவிடுகின்றனர். சில வருடங்களுக்கு பிறகு அவர்கள் அனைவரும் பெரியசாமி மனைவியின் நினைவு நாளில் மீண்டும் கிராமத்திற்கு திரும்பி வருகின்றனர். அப்போது பெரியசாமியால் சிறை சென்ற ஒருவரின் மூலம் பெரியசாமியின் குடும்பத்திற்கு ஆபத்து வருகிறது. இந்த ஆபத்தில் இருந்து பெரியசாமியின் குடும்பத்தை அவரது மகன் ஈஸ்வரன் (சிம்பு) காப்பாற்ற போராடுகிறார். இறுதியில் தனது குடும்பத்தை காப்பாற்றினாரா? ஆபத்தின் பின்னணி என்ன என்பதே படத்தின் மீதிக்தை.
முன்னதாக, ஈஸ்வரன் திரைப்படத்திற்கு திரையரங்குகளை 100% இருக்கைகளுடன் அனுமதிக்க வேண்டும் என்று நடிகர் சிம்பு தமிழக அரசிடம் கோரிக்கை வைத்தார். இதுதொடர்பாக சிலம்பு வெளியிட்ட செய்திக் குறிப்பில், " ஈஸ்வரன் பொங்கல் தினத்தன்று வெளிவர இருக்கிறது. மிக முக்கியமாக இந்தப் படம் வெகு குறுகிய காலத்தில் தயாரானதே திரையரங்குகளின் மீட்சிக்காகத்தான்.
திரையுலகமே முடங்கிவிட்டது. ஆன்லைன் வெளியீடுகள் ஓரளவு காப்பாற்றி வந்தாலும், திரையரங்குகள் திருவிழா கோலம் பூண வேண்டியது அவசியம்.
அதற்காகத்தான் இந்தக் கொரோனா காலத்திலும் வெகுபிரயத்தனப்பட்டு, உயிரைப் பணயம் வைத்து நடித்து முடித்து, தொழில் நுட்ப வேலைகள், டப்பிங் எல்லாம் செய்யப்பட்டது சாதாரண முயற்சியல்ல " என்று உருக்கமாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ஈஸ்வரன் திரைப்படம் சமூக வலைத்தளங்களில் சட்டவிரோதமாக வெளியாகியிருப்பது நடிகர் சிம்பு உட்பட அனைவரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.