சில தினங்களுக்கு முன்பு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்த நடிகர் சிம்பு, வந்தா ராஜாவா தான் வருவேன் படத்திற்கு பெரிய அளவில் பேனர்கள், கட்அவுட்கள் வைக்க வேண்டாம். பால் அபிஷேகம் எல்லாம் செய்யாதீர்கள் என்ற தனது ரசிகர்களிடம் கோரிக்கை வைத்திருந்தார்.
சிம்பு வைரல் வீடியோ :
இந்நிலையில் தற்போது அதற்கு மாறாக புதிய வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். அதில், “ரசிகர்கள் அனைவருக்கும் வணக்கம். ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தேன். என் படத்திற்கு அதிகமாக டிக்கெட் விலைக்கொடுத்து வாங்காதீர்கள், கட்அவுட், பேனர்கள் வைத்து பால் அபிஷேகம் எல்லாம் செய்யவேண்டாம். அதற்கு பதிலாக அம்மாவுக்கு ஒரு புடவை, அப்பாவுக்கு சட்டை எடுத்துக் கொடுங்கள் என்று கூறியிருந்தேன்.
பெரியார் குத்து… இந்த பாட்டுக்கு STR ஏன் இந்த பெயரை வைத்தார் தெரியுமா?
ஆனால் எனக்கு அந்த அளவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்களா?.. இவரெல்லாம் எதற்கு இதுப்பற்றி பேசுகிறார். வெறும் விளம்பரத்திற்காக தான் சிம்பு அப்படி கூறினார். அவருக்கு இருக்கிறதா ஒன்று இரண்டு ரசிகர்கள் தான் இருக்கிறார்கள் என்று பேசி வருகின்றனர்.
Sirapaana.. Tharamaana.. Sambavathe Inime Than Paaka Poreenga..???? #STRRage #STRFansRage #VanthaRajavathaanVaruven #Simbu pic.twitter.com/mxYfAyhc7T
— STR 360° (@STR_360) 22 January 2019
அந்த இரண்டு ரசிகர்களுக்கு அன்பு கட்டளை விடுக்கிறேன். இது வரை நீங்கள் செய்யாத அளவுக்கு பெரிய அளவில் கொண்டாட வேண்டும். பெரிய பேனர், கட்அவுட் வைத்து பாக்கெட் இல்லை அண்டாவில் பாலை ஊற்ற வேண்டும். வந்த ராஜாவா தான் வருவேன் படத்தின் கொண்டாட்டம் வேற லெவலில் இருக்க வேண்டும்” என்றார்.