தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து, பலரின் கனவுக் கன்னியாக திகழ்ந்தவர் நடிகை சிம்ரன். கமல், விஜய், அஜித், சூர்யா உள்ளிட்டோருடன் நடித்திருந்த சிம்ரன், கடந்தாண்டு பொங்கலுக்கு வெளியான ‘பேட்ட’ படத்தின் மூலம், ரஜினிகாந்துடன் நடித்திருந்தார். ஸ்லிம் ஃபிட், சிக் டான்ஸ் இது தான், சிம்ரன் என்றதுமே அனைவரின் நினைவுக்கும் வரும்.
கொரோனா குடலை பாதிக்குமா, புது ஆய்வு கூறுவதென்ன?
அதனை மெய்ப்பிக்கும் வகையாக, தற்போது சிம்ரன் ஆடிய ஒரு நடன வீடியோ, இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த லாக்டவுன் நேரத்தில், சமூக வலைதளங்களில் படு ஆக்டிவாக இருக்கிறார் சிம்ரன். அதோடு டிக் டாக்கில், தொடர்ந்து வீடியோக்களை வெளியிட்டும் வருகிறார். அதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்து வருகிறது. இந்நிலையில் தெலுங்கில் சூப்பர் ஹிட் பாடலான, ’புட்ட பொம்மா’ என்ற பாடலுக்கு நடனமாடியிருக்கிறார் சிம்ரன். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Dance always keeps me up and running❤️#StayHomeStaySafe #WeWillGetThroughThisTogether #slimfitsimran #dancewithme pic.twitter.com/UjHazzALtE
— Simran (@SimranbaggaOffc) May 13, 2020
நாட்டின் 90% கொரோனா பாதிப்புகளை அறுவடை செய்யும் டாப் 10 மாநிலங்கள்
இதனை ட்விட்டரில் வெளியிடும்போது, ’டான்ஸ் தான் என்னை எனர்ஜியாக வைத்திருக்கிறது’ என்று குறிப்பிட்டு இருந்தார் சிம்ரன். இதனை பார்த்த ரசிகர்கள், அவரைப் பாராட்டி வருகிறார்கள். இதற்கிடையே இரண்டு வாரங்களுக்கு முன்பு, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர், டேவிட் வார்னர் இதே புட்ட பொம்மா பாடலுக்கு, தனது மனைவி குழந்தையுடன் ஆடிய நடனம் இணையத்தில் வைரல் ஆனது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”