நாட்டின் கொரோனா வைரஸ் பரவலில் 90 சதவீதத்திற்கும் அதிகமான பாதிப்புகள் பத்து மாநிலங்களில் இருந்து மட்டுமே உருவாகின்றன. மேலும் பல மாநிலங்களும் கணிசமான எண்ணிக்கையிலான நோயாளிகளைக் குவித்துள்ளன.
பீகார், ஜம்மு-காஷ்மீர் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்கள் இப்போது 1,000 உறுதிப்படுத்தப்பட்ட பாதிப்புகளை நெருங்கி வருகின்றன, அதே நேரத்தில் ஹரியானாவில் 793 பாதிப்புகளும், ஒடிசாவில் 538 பாதிப்புகளும் பதிவாகியுள்ளன. இந்த எண்ணிக்கைகள் கேரளாவை விட அதிகமானவை. சண்டிகர் நகரில் கூட இதுவரை 189 வழக்குகள் பதிவாகியுள்ளன, ஜார்க்கண்டில் 177 வழக்குகள் உள்ளன. தலாய் மாவட்டத்தில் ஒரு பிஎஸ்எஃப் முகாமில் கண்டறியப்பட்ட தொற்றுநோய்களுக்கு திரிபுராவில் 150 க்கும் மேற்பட்ட பாஸிட்டிவ் பாதிப்புகள் உள்ளன.
மத்திய அரசு வெளியிட்ட ஆரோக்யா சேது வழிகாட்டுதல்கள் கூறுவது என்ன?
35 நாட்களுக்கு மேலாக, ஏப்ரல் முதல் வாரத்தில் கண்டறியப்பட்ட ஏழு பேரைத் தாண்டி ஒரு நோயாளி கூட கோவாவில் இல்லை, அதன்பின்னர் அனைவரும் குணமடைந்துள்ளனர். இருப்பினும், புதன்கிழமை, கோவா மேலும் ஏழு பாதிப்புகளை கண்டுபிடித்தது, அவர்கள் அனைவரும் மற்ற இடங்களிலிருந்து அம்மாநிலத்திற்குத் திரும்பியவர்கள். அவர்களில் ஐந்து பேர் மகாராஷ்டிராவின் சோலாப்பூரிலிருந்து திரும்பிய ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். மேலும் இருவர் ஓட்டுநர்கள், ஒருவர் குஜராத்தில் இருந்து திரும்பியவர், மற்றவர் மும்பையிலிருந்து வந்தவர்.
புதன்கிழமை, நாடு முழுவதும் 3700 க்கும் மேற்பட்ட புதிய பாதிப்புகள் கண்டுபிடிக்கப்பட்டன, மொத்த உறுதிப்படுத்தப்பட்ட பாதிப்புகளின் எண்ணிக்கை 78,000 தாண்டியது. மகாராஷ்டிராவில் இவற்றில் ஏறக்குறைய 1500 பாதிப்புகள் பதிவாகியுள்ளன, கடந்த சில நாட்களில் தமிழகம் அதன் முந்தைய சாதனைகளை ஒப்பிடும்போது, ஒப்பீட்டளவில் குறைந்த எண்ணிக்கையிலான 509 பதிவானது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் 700 முதல் 800 வழக்குகள் வரை பதிவாகியுள்ளது. புதன்கிழமை மாலை வரை, தமிழகத்தில் மொத்தம் 9227 பாதிப்புகள் பதிவாகியது. இது குஜராத்தை(9268) விட சற்று குறைவு. நாட்டில் அதிக மாநிலம் கொண்ட இரண்டாவது மாநிலம் குஜராத் தான்.
பஞ்சாப், இந்த மாத தொடக்கத்தில் அதன் எண்ணிக்கை மூன்று மடங்கிற்கும் மேலாக அதிகரித்ததைக் கண்டது, தற்போது அதன் எண்ணிக்கை குறைந்துள்ளது. கடந்த மூன்று நாட்களாக, மிகக் குறைவான எண்ணிக்கையிலான புதிய பாதிப்புகளே அங்கு பதிவாகியுள்ளன. புதன்கிழமை, பஞ்சாபில் இருந்து வெறும் பத்து பாதிப்புகளே பதிவாகியுள்ளன. தற்போது வரை 1,924 நோய்த்தொற்றுகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. மகாராஷ்டிராவின் நந்தேடில் உள்ள ஒரு சன்னதியில் இருந்து திரும்பி வந்த யாத்ரீகர்களுக்கு ஏற்பட்ட தொற்றுநோய்களால் பஞ்சாபில் அதிக பாதிப்பு ஏற்பட்டது.
கொரோனாவை எதிர்க்க ஏன் மாஸ்க் அவசியம்? - புதிய ஆய்வுகளும் புதிய காரணங்களும்
புலம்பெயர்ந்த தொழிலாளர்களைப் போலவே, பல மாநிலங்களில் கணிசமான எண்ணிக்கையிலான புதிய பாதிப்புகள் கண்டறியப்பட்டு வருகின்றன. பஞ்சாப் தவிர, ஒடிசா இந்த பிரச்சனையை மிகவும் கடுமையாக எதிர்கொண்டது. சமீபத்திய நாட்களில் அதன் அனைத்து பாதிப்புகளும் பிற மாநிலங்களிலிருந்து திரும்பும் தொழிலாளர்கள் அல்லது அவர்களின் உடனடி தொடர்புகளில் கண்டறியப்பட்டுள்ளன. புதன்கிழமை, ஒடிசா மேலும் 73 வழக்குகளைப் பதிவுசெய்தது, அதன் எண்ணிக்கை 611. கோவாவின் புதிய பாதிப்புகளும் பிற மாநிலங்களிலிருந்து திரும்பி வருபவர்களில் அடங்கும்.
ஆந்திராவிலும், பெரும்பாலும் மகாராஷ்டிரா மற்றும் குஜராத்தில் இருந்து திரும்பும் 73 புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 3,000 க்கும் மேற்பட்ட பாதிப்புகள் ஏற்பட்டதில், சென்னையில் உள்ள கோயம்பேடு சந்தையுடன் தொடர்பு கொண்டுள்ளது. மற்ற மாநிலங்களில் இருந்து கோயம்பேடு மார்க்கெட் வந்த அனைவரையும் தேடுவதற்கு அரசு இப்போது எச்சரிக்கை விடுத்துள்ளது. தெலுங்கானா, கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டிலிருந்து வரும் மக்களும் மாநில எல்லைகளில் நிறுத்தப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட மையங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறார்கள். ஆந்திராவில் தற்போது வரை 2,137 பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
நாட்டில் இறந்தவர்களின் எண்ணிக்கை இப்போது 2,500 ஐ தாண்டியுள்ளது. இதில், 975 பேர் மகாராஷ்டிராவிலும், 566 பேர் குஜராத்திலிருந்தும் பதிவாகியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.