Singer Vijay Yesudas to quit singing in Malayalam movies : பிரபல பாடகர் யேசுதாஸின் மகன் விஜய் யேசுதாஸ். தமிழ், மலையாளம், தெலுங்கு என்று பல்வேறு தென்னிந்திய மொழிகளில் பாடல்களை பாடும் இவரின் சமீபத்திய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மலையாளா பத்திரிக்கை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் மலையாள திரையுலகில் இசைக்கலைஞர்களுக்கு மதிப்பும் மரியாதையும் அங்கீகாரமும் கிடைப்பதில்லை.
எனவே இனிமேல் மலையாள படங்களில் பாடல்கள் பாடப்போவதில்லை என்று கூறியுள்ளார். இனி தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முழு கவனமும் செலுத்தி பாடல்கள் பாட உள்ளேன். அங்கு பாடகர்களுக்கு நல்ல மரியாதை இருக்கிறது என்று அவர் கூறினார்.
மேலும் படிக்க : ”அருவருப்பான கருத்து இது”… கேரள நடிகர் சங்கத்தில் இருந்து வெளியேறிய பார்வதி!
நான் யேசுதாஸின் மகன் என்பதால் எனக்கு வாய்ப்புகள் ஒன்றும் வீடு தேடி வரவில்லை. நானாக ஒவ்வொரு இசையமைப்பாளரை சந்தித்து குரல் வளத்தை நிரூபித்து பின்பு தான் வாய்ப்புகளை பெற்றேன். 2000ம் ஆண்டு முதல் மலையாள திரையுலகில் பாடல்களை பாடி வருகிறார் விஜய்.
ஆனாலும் ”பல சமயங்களில் நான் பாடல்கள் பாடிவிட்டு வந்த பிறகு பாடகர்களை மாற்றி அதே பாடல்களை பாடவைத்த நிகழ்வுகள் எல்லாம் அரங்கேறியுள்ளது” என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார் விஜய். இதுவரையில் 300க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி, 3 முறை சிறந்த பாடகருக்கான மாநில அரசு விருது, 5 பிலிம்ஃபேர் விருதுகள், மற்றும் 2014ம் ஆண்டு நந்தி விருதும் பெற்றவர் விஜய்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil