scorecardresearch

சிவகார்த்திகேயன் பிறந்தநாளுக்கு பிரத்யேக மாஸ் அப்!

சிவகார்த்திகேயனின் நெருங்கிய தோழியும், பிரபல டிவி தொகுப்பாளினியுமான டிடி தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

sivakarthikeyan birthday msh up
sivakarthikeyan birthday msh up

Sivakarthikeyan Mash Up : நடிகர் சிவகார்த்திகேயன் ’இன்று நேற்று நாளை’ படத்தின் இயக்குனர் ரவிகுமாரின் அடுத்த படத்தில் ஒப்பந்தமானார். அதிக பொருட்செலவில் உருவான இப்படம், நிதி பற்றாக்குறை காரணமாக பாதியிலேயே நின்றது.  தற்போது பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு, மீண்டும் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது.

தொடங்கியது ‘ஷா – கில்’ விவாதம் : டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் ஓப்பனர் யார்?

சயின்ஸ் ஃபிக்‌ஷன் படமாக உருவாகும் இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் பிரீத் சிங் நடிக்கிறார். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். ஆர்.டி.ராஜா தயாரிக்கும் இப்படத்திற்கு ‘அயலான்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வரும் 17-ம் தேதி தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார் சிவகார்த்திகேயன்.

காதலர் தினத்தில் திருமணப்பதிவுச் சான்றிதழ் பெற்ற திருநங்கை சுரேகா – மணிகண்டன் தம்பதி

இதனைக் கொண்டாடும் விதமாக அவரது பிறந்தநாள் மாஸ் அப் ஒன்றை ஏ2 ஸ்டூடியோ நிர்வாகத்தினர் உருவாக்கியிருக்கிறார்கள். அதனை சிவகார்த்திகேயனின் நெருங்கிய தோழியும், பிரபல டிவி தொகுப்பாளினியுமான டிடி தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். இன்னும் 3 தினங்களே இருப்பதால், ஏற்கனவே பலவித கொண்டாட்டங்களுக்கு தயாராகி வந்தனர் சிவகார்த்திகேயன் ரசிகர்கள். இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள இந்த மாஸ் அப் சிவகார்த்திகேயன் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Sivakarthikeyan birthday mash up vijay tv dd