’அயலான்’ படத்தில் சிவகார்த்திகேயன் கேரக்டரின் சீக்ரெட்ஸ்

பி.எஸ். மித்ரானின் ஹீரோ வெளியானதைத் தொடர்ந்து, மீண்டும் அயலான் படத்தில் நடிக்கத் தொடங்கினார் சிவா. 

By: Published: February 18, 2020, 3:10:13 PM

Ayalaan: நடிகர் சிவகார்த்திகேயனின் சயின்ஸ் ஃபிக்‌ஷன் திரைப்படமான அயலான் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், அவர் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று வெளியிடப்பட்டது. போஸ்டரில், மகிழ்ச்சியான முகத்துடன் பிங்க் கலர் மிட்டாய் வைத்திருக்கும் சிவகார்த்திகேயன் புல் தரையில் படுத்திருக்கிறார். பக்கத்தில் பச்சை நிற ஏலியன், மஞ்சள் மிட்டாயுடன் சிரித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் அயலான் படத்தில் சிவகார்த்திகேயன் 3 வேடங்களில் நடிப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது ‘கிங்’ கோலி ஏரியா, உள்ள வராத! – 50 மில்லியன் பாலோயர்ஸ் கொண்ட முதல் இந்தியன்

’இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு’ கிடைத்தத் தகவலின் படி, முதன் முறையாக சிவகார்த்திகேயன் 3 வேடங்களில் நடிக்கும் இந்தப்படம் ஏலியன் – காமெடி ஜானரில் உருவாகும் எனத் தெரிகிறது. ’இன்று நேற்று நாளை’ படப்புகழ் ரவிக்குமார் இயக்கியுள்ள இப்படத்தில் ரகுல் ப்ரீத் சிங் வானியலாளராக நடிக்கிறார். நீரவ் ஷா ஒளிப்பதிவாளராக பணியாற்ற, இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். தவிர, ‘அயலான்’ படத்தில் பானுப்ரியா, யோகி பாபு, கருணாகரன் மற்றும் பாலிவுட் நடிகை இஷா கோபிகர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

‘அயலான்’ திரைப்படத்தின் வேலைகள் 2018-ஆம் ஆண்டின் துவக்கத்திலேயே ஆரம்பிக்கப்பட்டது. இருப்பினும் நிதி சிக்கல்கள் காரணமாக படப்பிடிப்பு தாமதமானது. இதற்கிடையே பி.எஸ். மித்ரானின் ஹீரோ வெளியானதைத் தொடர்ந்து, மீண்டும் அயலான் படத்தில் நடிக்கத் தொடங்கினார் சிவா.

விஜய்யின் குட்டி ஸ்டோரி பாடலுக்கு வெளிநாட்டு மாணவர்கள் ஹேப்பி டான்ஸ்; வைரல் வீடியோ

அதோடு, ’கோலமாவு கோகிலா’ நெல்சன் திலிப்குமார் இயக்கும் ‘டாக்டர்’ படத்திலும் பிஸியாக உள்ளார் சிவகார்த்திகேயன். அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கும் இந்தப்படத்தில், யோகி பாபு, பிரியங்கா மோகன், வினய் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

2020-ன் மத்தியில் வெளியாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது கோவாவில் நடந்து வருகிறது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Entertainment News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Sivakarthikeyan to play triple role in ayalaan

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

JUST NOW
X