எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் முதல் பாடல் எம்.ஜி.ஆருக்கு அல்ல, எனக்கானது என்று நடிகர் சிவகுமார் தனது சமீபத்திய வீடியோவில் கூறியுள்ளார்.
ஹத்ராஸ் சம்பவம் குறித்த வீடியோ: சர்ச்சையைக் கிளப்பிய தமிழக பாஜக ஐடி பிரிவு தலைவர்
எஸ்பிபி, சிவகுமாரை விட ஐந்து வயது இளையவர். அவருக்கான முதல் பாடல் 'பால் குடம்' படத்திற்காக 'மல்லிகை பூ வாங்கி வந்தேன்'. எஸ்பிபி தமிழில் முதன்முதலில் பாடியது ஜெமினி கணேசனின் 'சாந்தி நிலையம்' படத்தில் வரும் 'இயற்கை என்னும் இளைய கன்னி', எம்.ஜி.ராமச்சந்திரனின் 'அடிமைப்பெண்' படத்திற்காக 'ஆயிராம் நிலவே வா'. ஆனால் அந்த திரைப்படங்கள் வெளியாக தாமதமாகின. அதனால் சிவகுமாரின் 'பால் குடம்' படம் 1969 பொங்கலுக்கு வெளியானது. எனவே அந்த கணக்கீட்டின் படி, 'பால் குடம்' படத்தின் 'மல்லிகை பூ வாங்கி வந்தேன்' பாடல் தான் தமிழில் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் முதல் தமிழ் பாடல் என்று நடிகர் சிவகுமார் கூறுகிறார்.
ஹோட்டல் ஸ்டைல் மொரு மொரு ரவா தோசை!
அதோடு எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துடன் மறக்க முடியாத சில நினைவுகளையும் சிவகுமார் பகிர்ந்துக் கொண்டார். மேலும் சில சூப்பர் ஹிட் பாடல்களையும் அவர் தந்திருந்தார். சமீபத்தில், எஸ்.பி.பி-யின் இசை பங்களிப்புக்காக சிவகுமார் அவரை பாராட்டினார். தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற அனைத்து மொழிகளிலும் முன்னணி பாடகராக இருந்தார் எஸ்பிபி. கொரோனா வைரஸ் கண்டறியப்பட்ட பின்னர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் ஆகஸ்ட் 5-ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், 51 நாட்கள் சிகிச்சைக்குப் பின்னர், அவரது உடல்நிலை திடீரென மோசமடைந்ததை அடுத்து, செப்டம்பர் 25-ம் தேதி அவர் காலமானார்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”