scorecardresearch

பாதிக்கப்பட்ட ஹத்ராஸ் பெண் வீடியோவை வெளியிடுவதா? பாஜக ஐடி பிரிவு தலைவருக்கு எதிர்ப்பு

பாதிக்கப்பட்டவரை அடையாளம் காட்டக்கூடாது என்ற உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்களை நிர்மல் குமார் மீறியதாக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டினர்.

பாதிக்கப்பட்ட ஹத்ராஸ் பெண் வீடியோவை வெளியிடுவதா? பாஜக ஐடி பிரிவு தலைவருக்கு எதிர்ப்பு
பாஜக ஐடி பிரிவு தலைவரின் சர்ச்சையான ட்வீட்

தமிழக பாஜக ஐ.டி பிரிவின் தலைவர், ஹத்ராஸ் சம்பவம் குறித்த  வீடியோவை பகிர்ந்து, அப்பாவி மக்கள் மீது காங்கிரஸ் “மலிவான அரசியல்” செய்வதாக குற்றம் சாட்டியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

6,000 mAh பேட்டரி, ட்ரிப்பிள் கேமரா… கலக்கும் சாம்சங் கேலக்ஸி F41

சி.டி.ஆர் நிர்மல் குமார் புதன்கிழமை, ஹத்ராஸில் பாதிக்கப்பட்ட சிறுமியின் வீடியோவை வெளியிட்டு, ஒரு ட்வீட்டையும் பதிவிட்டார். ”அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் தனது ஸ்டேட்மெண்டில் அவர் அப்படி கூறவேயில்லை” என அதில் குறிப்பிட்டார்.

“இது #ஹத்ராஸில் பாதிக்கப்பட்டவரின் வீடியோ. அவர் சரளமாக பேசுகிறார். அவருடைய நாக்கு வெட்டப்படவில்லை. ‘பாலியல் வன்கொடுமை’ பற்றி தனது அறிக்கையில் எதுவும் குறிப்பிடவில்லை. “இத்தாலிய மாஃபியா” எப்போதும் அப்பாவி மக்கள் மீது மலிவான அரசியலை செய்கிறது” என்று அவர் தனது வெரிஃபைடு ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். பாதிக்கப்பட்டவரை அடையாளம் காட்டக்கூடாது என்ற உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்களை நிர்மல் குமார் மீறியதாக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டினர்.

அவரது ட்வீட் வைரலாகிய பின்னர், ஆர்வலர்கள் மற்றும் பிற ட்விட்டர் பயனர்கள் ஐடி விங் தலைவரின் கருத்துக்களைக் கண்டித்தும், சிறுமியின் வீடியோவை வெளியிட்டதைக் கண்டித்தும் தங்களது கண்டனத்தை பதிவு செய்தனர். பின்னர் நிர்மல் குமார் தனது நடவடிக்கையை நியாயப்படுத்தினார். தனது “நோக்கம்” “பெரும்பாலான ஊடகங்கள் சொல்லத் தவறிய உண்மையை எடுத்துச் செல்வது தான்” என்றும் கூறினார்.

“19 வயது அப்பாவியிடம் (பெண்) நிறைய தைரியம் இருந்தது. ஒரு நேர்காணல் கொடுத்தார். மக்கள் உண்மையை அறிய வேண்டும் என்று அவர் விரும்பினார். ஆனால் எந்த ஊடகமும் இந்த செய்தியை எடுத்துச் செல்லவில்லை. மாறாக நாக்கு வெட்டப்பட்டது போன்ற வதந்திகள் மட்டுமே பரவின. இந்த குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையை தர நாங்கள் விரும்பினோம். எனது ட்வீட்டின் நோக்கம் நேற்று பெரும்பாலான ஊடகங்கள் சொல்லத் தவறிய உண்மையை எடுத்துச் செல்வதாகும்” என்று நிர்மல் குறிப்பிட்டிருந்தார்.

ஹோட்டல் ஸ்டைல் மொரு மொரு ரவா தோசை!

ஊடகங்களும் எதிர்க்கட்சிகளும் இதுபோன்ற சம்பவங்களை அரசியலாக்குவதை நிறுத்த வேண்டும் என்றும், அரசாங்கத்திடமிருந்தோ அல்லது காவல்துறையினரிடமிருந்தோ அதிகாரப்பூர்வ அறிக்கை வெளிவரும் முன்னர் “வாட்ஸ்அப் பல்கலைக்கழகத்தில்” இருந்து முடிவுக்கு வர வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Tamil nadu bjp it wing chief hathras victim video tweet controversy

Best of Express