தெலங்கானாவில் பெற்றோரை இழந்த யாதத்ரி-புவனகிரி மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று குழந்தைகளுக்கு நடிகர் சோனு சூட் உதவி அளிக்கவுள்ளார்.
புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் நடந்தே சொந்த ஊருக்கு செல்வதை பார்த்த நடிகர் சோனுசூட் அவர்களுக்கு வாகனம் ஏற்பாடு செய்து கொடுத்து அனுப்பி வைத்து நாடு முழுவதும் கவனம் பெற்றுள்ளார்.
வெளிநாடுகளில் சிக்கி தவித்த இந்திய மாணவர்கள் நாடு திரும்ப விமானம் ஏற்பாடு செய்து கொடுத்தார். வேலை இழந்து காய்கறி வியாபாரம் செய்த பெண்ணுக்கு மீண்டும் வேலை கிடைக்க ஏற்பாடு செய்தார்.
பிரசவத்திற்கு பிறகு வெயிட் போட்ட சினேகா; ஃபிட்டாக கடுமையான வொர்க் அவுட்
மாடுவாங்க பணமில்லாமல் தனது 2 மகள்களை ஏரில் பூட்டி உழுத விவசாயிக்கு டிராக்டர் வாங்கி கொடுத்தார். சோனு சூட் சேவையை பலரும் பாராட்டி வருகிறார்கள்.
தனது பிறந்த நாளையொட்டி புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் 3 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்க இருப்பதாக அறிவித்து இருக்கிறார். நல்ல சம்பளம், தொழிலாளர் வைப்பு நிதி, இன்சூரன்ஸ் வசதிகளோடு இந்த வேலை வாய்ப்புகள் வழங்கப்படும் என்று கூறி உள்ளார்.
இந்நிலையில், பெற்றோரை இழந்த மூன்று தெலங்கானா மாநில குழந்தைகளின் முழு பொறுப்பை தான் ஏற்றுக்கொள்வதாகவும் சோனு சூட் தற்போது உறுதியளித்துள்ளார்.
“அவர்கள் இனி அனாதைகள் அல்ல. அவர்களை இனி நான் கவனித்துக் கொள்வேன்" என்று சோனு சூட் தெரிவித்துள்ளார்.
அதிகாரப்பூர்வ தகவலின் படி, தெலங்கானாவைச் சேர்ந்த மூன்று குழந்தைகளின் தந்தை முன்னதாக காலமானார், அதே நேரத்தில் அவர்களின் தாயார் சமீபத்தில் இறந்தார். அவர்களுக்கு மிகவும் வயதான ஒரு பாட்டி இருக்கிறார்.
மகனை வைத்து அச்சுறுத்தல்: எதற்கும் அஞ்சாத ‘எழுச்சி’ மோனிகா!
இதற்கிடையில், குழந்தைகளின் அவலநிலை குறித்து அறிந்த அமைச்சர் எர்ரபெல்லி தயகர் ராவ், முன்னணி தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் தில் ராஜூவுக்கு தகவல் அளித்து,அந்த மூன்று குழந்தைகளையும் தத்தெடுத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.
தயாரிப்பாளர் தில் ராஜு, தனது ஆட்களை கிராமத்திற்கு அனுப்பி, தனது டிரஸ்ட் மூலம் குழந்தைகளின் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். இதைத் தொடர்ந்து, சோனு சூட் அவர்கள் மூவருக்கும் உதவ முன்வந்துள்ளார்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”