Soorai Pottru: சூரரை போற்று திரைப்படம் கேப்டன் ஜி.ஆர். கோபிநாத்தின் ஊக்கமிகு தொழில்முனைவோர் பயணத்தில் கொஞ்சம் கற்பனையை கலந்து, சுதா கொங்கரா விருந்து படைத்திருக்கிறார். அவர் வடிவமைத்துள்ள நெடுமாறன் ராஜங்கம் என்ற சூர்யாவின் கதாபாத்திரம், வெகுவாக ஈர்க்கிறது. அவரது உடல் ரீதியான மாற்றம் அந்த கதாபாத்திரத்திற்கு மைல் கல்லாக விளங்குகிறது.
Soorarai Pottru Review Live : குவியும் பாராட்டுகள், ஒரேயொரு வருத்தம் – சூரரைப் போற்று விமர்சனம்
சூர்யா தனது கதாபாத்திரத்தின் வெவ்வேறு வயதுகளில் நடிக்க, குறுகிய காலத்தில் எடையைக் குறைத்து மீண்டும் அதிகரிக்க வேண்டியிருந்தது. “எனக்கு உடற்தகுதி மிகவும் பிடிக்கும். நீங்கள் வழக்கமாக உடற்பயிற்சி முறையை பின்பற்றும்போது எடை அதிகரிப்பு அல்லது இழப்பு கடினம் அல்ல. நீங்கள் 80 சதவிகிதம் ஒழுக்கமாக இருக்கும்போது, உங்கள் நாட்களில் ஒன்றை (வொர்க்அவுட்டுக்கு) கொடுக்கும்போது, உங்கள் உணவு முறையை மாற்றி, எடையை அதிகரிக்கலாம். அதுவும் சுதா போன்ற ரிங் மாஸ்டர் இருக்கும்போது, உங்களுக்கு வேறு வழியில்லை” என்றார் சூர்யா.
உடல் மாற்றத்தை செய்வது சூர்யாவுக்கு பெரிய விஷயமல்ல, எனும் சுதா கொங்கரா, “அவர் விரும்பினால், சிஜி செய்திருக்க முடியும். ஆனால் அவர் அப்படிச் செய்யவில்லை” என்று குறிப்பிட்டார் இயக்குநர் சுதா கொங்கரா.
சூர்யா ஒரு ஷாட்டுக்கு 20 வயது போல் இருக்க வேண்டியிருந்தது. “உண்மையில், அவர் வெளியே சென்று செய்ததை பார்த்து நான் அதிர்ச்சியடைந்தேன். அந்த குறிப்பிட்ட தோற்றத்தில் அவரது திரை நேரம் வெறும் ஐந்து நிமிடங்கள் மட்டுமே. ஆனால், அந்த ஐந்து நிமிடங்களுக்கு அவர் சரியானவராக இருக்க விரும்பினார். நீங்களே அதைச் செய்ய நினைத்தால் ஒழிய, எந்த ரிங் மாஸ்டரும் அதைச் செய்ய முடியாது” என்று சுதா நினைவு கூர்ந்தார். அவரது “கடுமையான” முயற்சி, முழு குழுவினருக்கும் உடனடியாக தங்களது கதாபாத்திரத்துடன் இணைவதற்கு உதவியது என்றார்.
சூரரை போற்றுவோம் படத்தை உருவாக்குவதில் இருந்த சவால்களில் ஒன்று, உணவு பற்றாக்குறை, குடிநீர் மற்றும் சுத்திகரிப்பு ஆகியவற்றால் தினமும் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் மக்களுக்கு, பொருத்தமான ஒரு விமான நிறுவனத்தைப் பற்றிய கதையை எவ்வாறு உருவாக்குவது என்பதுதான் என சூர்யா கூறினார். “இது தான் எங்கள் சவால் என்று நான் நினைக்கிறேன்” என indianexpress.com -மிடம் சூர்யா கூறினார்.
இது (கதை) எல்லோரிடமும் இணைகிறது. இன்றும் கூட, கிராமங்களிலும் நகரங்களிலும் உள்ள பொது மக்கள் வானத்தில் ஒரு விமானத்தின் சத்தத்தைக் கேட்கும்போது அது கடந்து செல்லும் வரை அதைப் பார்க்கிறார்கள். இப்போது கூட, மக்கள் தொகையில் 3.5 சதவீதம் பேர் மட்டுமே விமானத்தைப் பயன்படுத்துகின்றனர். நிறைய பேருக்கு இது இன்னும் ஒரு கனவுதான்” என்று அவர் மேலும் கூறினார்.
சூரரை போற்று போன்ற திரைப்படங்கள் வழக்கமான பொழுதுபோக்குகளை விட முக்கியமானது என்று சூர்யா குறிப்பிட்டார். “கற்பனை செய்து பாருங்கள், கோபிநாத் சார் குறைந்த கட்டண விமான சேவையை தொடங்கியபோது என்ன நிலைமை இருந்திருக்கும். 2000-ஆம் ஆண்டில் 400-க்கும் குறைவான விமானங்கள் இருந்தன என்று நினைக்கிறேன். இப்போது விமானத் தொழில் முற்றிலும் மாறுபட்டுள்ளது. இது ஒரு முக்கியமான கதை என்று நான் நினைக்கிறேன்” என்றார் சிங்கம் நட்சத்திரம்.
சூரரைப் போற்று: முழுப் படத்தையும் ஆன்லைனில் லீக் செய்த தமிழ் ராக்கர்ஸ்
சுவாரஸ்யமாக, விமானத்தை வாங்க முடிந்தாலும், இன்றுவரை சூர்யா பொருளாதார வகுப்பிலேயே பயணிக்க விரும்புகிறார். “ஆம் (நான் ஒரு பொருளாதார வகுப்பில் பயணம் செய்கிறேன்) எனது குடும்பத்துடன் பயணம் செய்கிறேன். நாங்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து பயணம் செய்கிறோம். எனது வாழ்க்கையில் ரொம்ப வருடங்கள் வணிக வகுப்பில் பயணம் செய்யும் ஆடம்பரம் இல்லை. நான் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்த பிறகும், வணிக வகுப்பில் பயணம் செய்ய எனக்கு சுமார் 12 ஆண்டுகள் பிடித்தன” என்று அவர் குறிப்பிட்டார்.
சூரரை போற்று படம் அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகியிருக்கிறது.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”