கொரோனா வைரஸ் பூட்டுதலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பாடகர்கள் மற்றும் இசைக்கலைஞர்களை ஆதரிக்க தென்னிந்தியாவில் உள்ள இசைத் துறையைச் சேர்ந்த பிரபல பின்னணி பாடகர்கள் ஒன்றிணைந்துள்ளனர். பாடகர்கள் சீனிவாஸ், பி. உன்னிகிருஷ்ணன், சுஜாதா, ராகுல் நம்பியார் மற்றும் ரஞ்சித் ஆகியோரை முக்கிய உறுப்பினர்களாகக் கொண்ட, யுனைடெட் சிங்கர்ஸ் நற்பணி மன்றம், ஆகஸ்ட் 15 ஆம் தேதி ஒரு பாடலை வெளியிடுகிறது.
’தளபதிய பாத்ததுல செம்ம ஹேப்பி’: வைரலாகும் விஜய் வீடியோ கால்!
ஆஸ்கார் விருது பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் பிரபலமான பாடலை மறு உருவாக்கம் செய்யப்பட்ட பாடல் தான் அது (இதனை சர்ப்ரைஸாக வைத்திருக்க விரும்புகிறது குழு). எஸ்.பி. பாலசுப்பிரமணியம், ஹரிஹரன், ஷங்கர் மகாதேவன், மனோ மற்றும் சித்ரா போன்ற மூத்தவர்கள் உட்பட 65 பாடகர்கள் இணைந்து இதனைப் பாடியிருக்கிறார்கள்.
அமித்ஷா, எடியூரப்பாவுக்கு கொரோனா: சந்தித்த தலைவர்கள் சுய தனிமைப்படுத்தல்
இது குறித்து, ”டுகெதர் அஸ் ஒன்" என்ற தலைப்பில் எங்கள் பாடல் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் பாடப்பட்டுள்ளது. இது சுதந்திர தினத்தில் வெளியிடப்படும். முழு பாடலும் லாக்டவுனில் அவரவர் வீடுகளில் இருந்தே பதிவு செய்யப்பட்டது” என்றார் ராகுல் நம்பியார்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”