/tamil-ie/media/media_files/uploads/2020/09/cats-13.jpg)
RIP Balasubramaiyam : பாடும் வானம்பாடி, நிலா என்று அனைவராலும் நேசிக்கப்பட்ட பாடகர் எஸ்.பி.பி. இன்று உடல் நலக்கோளாறு காரணமாக பகல் 01:04 மணி அளவில் உயிரிழந்தார். அவரின் மறைவிற்கு திரையுலகினர் பலரும் அஞ்சலி மற்றும் இரங்கல் செய்திகள் தெரிவித்து வருகின்றனர். எஸ்.பி.பி இறுதியாக தன்னுடைய குரலில் ரஜினியின் புதிய படமான அண்ணாத்தவிற்காக பாடியுள்ளார் என்பதை உறுதி செய்துள்ளார் இசையமைப்பாளர் டி.இமான்.
மேலும் படிக்க : ஒரு சகாப்தம் முடிவுக்கு வந்தது… கண்ணீரில் நனையும் தமிழ் திரையுலகம்!
பாலசுப்ரமணியனின் மறைவு குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்ட அவர், நம்முடைய எத்தனையோ இரவுகள் அவரின் துணையோடு முடிந்திருக்கிறது. என்னுடைய சின்னத்திரை பயணத்திலும், வெள்ளித்திரை பயணித்துலும் அவருடன் இணைந்து நான் பணியாற்றி இருக்கிறேன். ஜில்லா படத்திற்காக பாட்டு ஒன்னு கட்டு கட்டு தோழா பாடலை பாடியிருந்தார் எஸ்.பி.பி.
அதன் பிறகு தற்போது, ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்திற்கு எஸ்.பி.பி. இறுதியாக தன்னுடைய குரலால் பாடல் ஒன்றை பாடியுள்ளார் என்று அறிவித்துள்ளார். அவருடைய இறுதி பாடல் என்னுடைய இசையமைப்பில் நிகழ்ந்தது எனக்கு மிகப்பெரிய ஆசிர்வாதம். அவருக்கு மாற்று என்று யாருமே இல்லை என்றும் டி. இமான் கூறியுள்ளார். இந்த அறிவிப்பு எஸ்.பி.பி. ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தை தரக்கூடியதாக அமைந்திருக்கிறது. எத்தனையோ ஆயிரம் பாடல்களை பாடியிருக்கிறார் எஸ்.பி.பி. நாள் ஒன்றுக்கு ஒரு பாடல் என்று வைத்துக் கொண்டாலும் வாழ்நாள் முழுவதும் அவரின் பாடலை கேட்டுக் கொண்டே இருக்கலாம் என்பது தான் உண்மை.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.