Sri Reddy Tamil Leaks: சினிமாவில் சான்ஸ் வாங்கித் தருவதாகக் கூறி, தெலுங்கு திரையுலகம் போலவே தமிழகத்திலும் தன்னை பாலியல் ரீதியாகப் பலரும் உபயோகப்படுத்தியதாக ஸ்ரீ ரெட்டி புகார் தெரிவித்தார். இந்தப் பட்டியலில் ராகவா லாரன்ஸ் பெயரையும் அவர் வெளியிட்டார்.
Sri Reddy Tamil Leaks: ஸ்ரீரெட்டி வைத்த குற்றச்சாட்டுக்கு பொங்கியெழுந்த ராகவா லாரன்ஸ்:
ராகவா லாரன்ஸ் தன்னை ஹைதராபாத்தில் சந்தித்ததாகவும், அப்போது படத்தில் வாய்ப்பு வாங்கித் தருவதாக கூறி தன்னை பாலியல் ரீதியாகப் பயன்படுத்தியதாகவும் புகார் தெரிவித்தார். இதற்கு வெகு நாட்களாகப் பதில் அளிக்காத ராகவா லாரன்ஸ் தற்போது ஃபேஸ்புக்கில் இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
இதில், “ஸ்ரீ ரெட்டி என் மீது கூறிய புகார் பற்றி பலரும் கேட்பதால் இப்போது அதற்கான விளக்கத்தை அளிக்க நினைக்கிறேன். ஸ்ரீ ரெட்டி நீங்கள் என்னை ரெபெல் படத் தயாரிப்பின்போது சந்தித்ததாகக் கூறினீர்கள். ரெபெல் படம் வந்து 7 வருடங்கள் ஆயிற்று. அப்படி நான் உங்களிடம் தவறாக நடந்திருந்தால் அப்போதே கூறாமல் ஏன் இப்போது கூற வேண்டும். அதிலும் ஒரு ஓட்டலில் நீங்கள் கூறியது போல நான் ராகவேந்திரர் ஃபோட்டோவும் ருத்ராக்ஷ மாலை வைத்திருந்ததாகவும் கூறியுள்ளீர்கள். ஒரு ஓட்டல் அறையில் ருத்ராச்ஷ மாலையை வைத்து பூஜை செய்ய நான் ஒன்று முட்டாள் இல்லை. நான் தவறு எதுவும் செய்யவில்லை. என் மீது அபாண்டமாகக் குற்றம் சுமத்துவது சரியல்ல.
நீங்கள் என் மீது சும்மத்தும் பழி என்ன? நான் சினிமா சான்ஸ் தருவதாக கூறி ஏமாற்றிவிட்டேன் என்பது தானே? சரி. அப்படியானால், நான் ஊடகங்கள் அனைத்தையும் அழைத்து செய்தியாளர்கள் சந்திப்பு வைக்கிறேன். அங்கு உங்களுக்கு நடிக்க ஒரு சீன் தருகிறேன், ஆடுவதற்கு எளிமையான ஸ்டெப்ஸ் தருகிறேன். நீங்கள் உண்மையில் திறமை வாய்ந்தவர்கள் என்றால் அப்போதே உங்களுக்கு அட்வான்ஸ் அளித்து நடிகையாகத் தேர்வு செய்கிறேன். இல்லை எல்லோர் முன்பும் நடிக்கத் தயக்கமாக உள்ளது என்றால், உங்கள் மேனேஜர், உங்கள் தரப்பு வக்கீல் ஒருவரை அழைத்து வாருங்கள். அப்போது நடித்துக் காட்டவும். உங்கள் நடிப்பு பிடித்திருந்தால் வாய்ப்பு கிடைக்கும். நான் யாருக்கும் பயப்படவில்லை. நான் தவறு செய்யவில்லை எனவே தைரியமாக பேசுகிறேன்.
என்றும் நல்லதையே நினைப்போம் நல்லதையே செய்வோம். உங்கள் வாழ்க்கை மேம்பட இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.” என்று லாரன்ஸ் கூறியுள்ளார்.