Simbu's Speech : நடிகர் சிம்பு தற்போது வெங்கட் பிரபுவின் ‘மாநாடு’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதற்கிடையே தனலட்சுமி ஸ்ரீநிவாசன் கல்லூரியின் ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துக் கொண்டு, நீண்ட நாட்களுக்குப் பிறகு கல்லூரி மாணவர்கள் முன்னிலையில் உரையாற்றினார்.
அமெரிக்க அதிபர் டிரம்பின் இந்தியா வருகை Live : ஆமதாபாத்தில் விரைவில் சந்திப்போம் – மோடி டுவீட்
அப்போது பேசிய அவர், “நீங்க இல்லாம நான் இல்ல. எஃப்1 கார் ரேஸ்ல தொடர்ந்து ஓட்ட முடியாது. கொஞ்சம் கேப் எடுத்துட்டு ஃப்யூவல் மாத்திட்டு உள்ள வந்துச்சுன்னா.... திரும்பவும் சொல்றேன், ஃபர்ஸ்ட் யாரு முன்னாடி போறதுன்னு முக்கியம் இல்ல, லாஸ்ட்ல யாரு ஃபர்ஸ்ட் வர்றதுங்கறது தான் முக்கியம். சின்ன வயசுல இருந்தே நடிச்சிட்டு இருக்கேன். சரின்னு நானும் ஒரு சின்ன கேப் எடுத்துட்டேன். மன்னிச்சுக்கங்க. இப்போ திரும்பி வந்துட்டேன், இனி உங்கள விட்டு எங்கேயும் போக மாட்டேன்.
ஒருத்தன் தோத்துட்டான்னு சொல்லும் போது, ஒருத்தன் காலியாகிட்டானு சொல்லும் போது என் கூட நின்னீங்க நீங்க. உங்கள எப்படிங்க விட்டுக் கொடுப்பேன். சினிமாவுல நிறைய கேரக்டர்ஸ் இருக்கும். அதுல ஒருத்தன் ரொம்ப கஷ்டப் படுவான், அவனுக்கு நிறைய பிரச்னை இருக்கும். அவன ஒருத்தன் கீழ தள்ளுவான். ஆனா அதெல்லாம் சரி பண்ணிட்டு கடைசியா நின்னா அவர் பேரு ஹீரோ. அதே படத்துல ஒருத்தன் ஃபர்ஸ்ட்ல இருந்தே ஹேப்பியா இருப்பான். ஜெயிச்சுக்கிட்டே இருப்பான். எல்லாமே நாம தான்னு நினைப்பான். அவனுக்குப் பேரு வில்லன். அப்போ ரியல் லைஃப்ல ஒருத்தன் ஜெயிச்சுக்கிட்டே இருக்கான், சந்தோஷமா இருக்கான், பிரச்னையே இல்லாம இருக்கான்னா அவர் பேரு என்ன... வில்லன் (ரசிகர்கள் கூட்டம்). அதே ரியல் லைஃப்ல ஒருத்தன மேல வர விட மாட்டேங்குறாங்க, கஷ்டப்படுறான், அவன மேல வர விடாம தடுக்குறாங்க. ஆனா அவன் எப்படியாவது மேல வரணும்ன்னு போராடுறான்னா அவன் ஹீரோ, அந்த ஹீரோவா என்ன ஆக்குனதுக்கு கடவுளுக்கும் உங்களுக்கும் நன்றி.
கஷ்டம் வந்தா ஃபீல் பண்ணாதீங்க, பாட்டு போட்டு நல்லா டான்ஸ் ஆடுங்க. பிரச்னையே இல்லாத வாழ்க்கையே இல்லங்க.சத்தியமாக நானே உங்கக் கிட்ட நானே கேக்கணும்ன்னு நினைச்சேன். திரைத்துறை தொடங்கி எல்லோரும் இவன் வேண்டாம், சரியில்லன்னு சொல்றாங்க. ஆனா உங்களுக்கு என்னை பிடிச்சிருக்கு அதெப்படி... நீங்க இப்படி கைத்தட்டுறதுனால தான், தேவையில்லாம என்னை சீண்டுறாங்க. நீங்க சும்மா இருந்தா, அவங்களும் கம்முனு இருப்பாங்க.
ரஜினியின் ரசிகை ஜெயலலிதா! – ‘பெரியத்தை’ சீக்ரெட்ஸ் பகிரும் கிருஷ்ணப்ரியா
இவ்ளோ பிரச்னையாகி, இப்போ தான் ஒருவழியா ‘மாநாடு’ தொடங்கியிருக்கு. இப்போ நீங்க இப்படியெல்லாம் பண்ணா, திரும்பவும் பிரச்னை பண்ணுவாங்க. யப்பா இதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்ல. சிம்பு பெண்களுக்கு எதிரானவன், அவங்களை திட்டுறான்னு சொல்றாங்க. ஆனா அந்தப் பெண்கள் தான் என் மேல அவ்வளவு அன்பு வச்சிருக்காங்க. பெண்களுக்கு பிரச்னைன்னா, முதலில் குரல் கொடுப்பது நான் தான். பெண்களுக்கு பிரச்னை தருபவர்களை சும்மா விடமாட்டேன்” என்ற சிம்பு விடிவி கணேஷ் மாதிரி குரலை மாற்றிப் பேசினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.