சன் டி.வி முக்கிய சீரியலுக்கு என்ட் கார்டு: நடிகை ஸ்ருதி ராஜ் உருக்கமான பதிவு

சன் டிவியில் முடிவுக்கு வரும் முக்கிய சீரியல்; உருக்கமான பதிவுடன் பிரியா விடை கொடுத்த இசை

சன் டிவியில் முடிவுக்கு வரும் முக்கிய சீரியல்; உருக்கமான பதிவுடன் பிரியா விடை கொடுத்த இசை

author-image
WebDesk
New Update
sruthi raj

ஸ்ருதி ராஜ்

சன் டிவியில் ஒளிப்பரப்பாகி வந்த தாலாட்டு சீரியல் சனிக்கிழமையோடு முடிவடைந்துள்ள நிலையில், அந்த சீரியலில் இசையாக நடித்த ஸ்ருதி ராஜ் உருக்கமான பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

Advertisment

சன் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற  சீரியல்களில் தாலாட்டு சீரியலும் ஒன்று. இந்த சீரியலில் இசைப்ரியாவாக ஸ்ருதி ராஜ் நடித்தார். ஸ்ருதி ராஜ் சன் டிவியில் தென்றல் சீரியல் மூலம் மக்களுக்கு அறிமுகமானார். இந்த சீரியலில் தீபக் கதாநாயகனாக நடித்தார். அதன் பிறகு அவருக்கு விஜய் டிவியின் ஆபீஸ் தொடருக்கான வாய்ப்பு கிடைத்தது. ஆபீஸ் சீரியலில் கார்த்திக் ராஜ் ஜோடியாக நடித்ததன் மூலம் ஸ்ருதி ராஜ் பிரபலமானார். பின்னர் விஜய் டிவியில் ஒளிப்பரப்பான அன்னக்கொடியும் 5 பெண்களும் சீரியலில் நடித்தார்.

இதையும் படியுங்கள்: சேர்ந்து வாழ விரும்பினேன்; பிரிவுக்கு காரணம் ரச்சிதாவின் தோழி: தினேஷ் ஷாக் வாக்குமூலம்

publive-image
Advertisment
Advertisements

சீரியல் மட்டுமில்லாமல் சுருதி ராஜ் நடிகர் விஜயின் மாண்புமிகு மாணவன் படத்தில் அவரது உடன் படிக்கும் தோழியாக நடித்துள்ளார். பின்னர், இனி எல்லாம் சுகமே என்ற தமிழ் படத்தில் நடித்திருந்தார். அதைத் தொடர்ந்து, காதல்டாட் காம், மந்திரன், ஜெர்ரி, இயக்கம் ஆகிய படங்களிலும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

publive-image

இந்தநிலையில், ஸ்ருதி ராஜ் சன் டிவியில் நடித்து வந்த தாலாட்டு சீரியல் சனிக்கிழமையோடு (ஜூன் 24) முடிவுக்கு வந்தது. இதை கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர் சீரியல் குழு. ஏப்ரல் 2021 இல் ஒளிபரப்பைத் தொடங்கிய இந்த சீரியல், 700 எபிசோட்களுக்கும் மேல் கடந்துள்ளது. இந்த சீரியலில் கிருஷ்ணா, ஸ்ருதி ராஜ், ஸ்ரீ லதா, ஸ்ரீதேவி அசோக், சர்வேஷ் ராகவ், தரணி மற்றும் ரிஷி கேசவ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஸ்ருதி இந்த சீரியலில் இசையாக நடித்தார். இசை கதாபாத்திரம் மக்கள் மனதில் நல்ல இடத்தை பிடித்தது.

இந்தநிலையில், இந்த சீரியலின் கடைசி நாள் ஷூட்டிங் போது இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் ஒன்றை பதிவிட்டுள்ளார் ஸ்ருதி ராஜ். அதில் ரசிகர்கள், சீரியல் குழு, மக்கள் அனைவருக்கும் நன்றி என உருக்கமாக பதிவிட்டுள்ளார். ஸ்ருதியின் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் நாங்களும் இசையை மிஸ் பண்ணுகிறோம், தாலாட்டு சீரியலின் முடிவு எங்களை மிகவும் பாதித்துள்ளது என கமெண்ட் செய்து வருகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Sun Tv Actress Sruthi Raj

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: