விஜய் திரைப்படம் டூ சின்னத்திரை பயணம்… நடிப்பில் ஸ்ருதியை அடிக்க ஆளே இல்லை!

முதன் முறையாக தமிழ் சினிமா உலகிற்கு விஜய் படத்தின் மூலம் தான் அறிமுகமானர்.

sun tv azhagu serial sudha : சின்னத்திரை தொலைக்காட்சியில் பிரபலமான சீரியல் நடிகை என்றால் ஸ்ருதி ராஜை கூறலாம். அந்த அளவிற்கு பல சீரியல்களில் நடித்து ரசிகர்களை தன்பக்கம் வைத்துள்ளார். பார்ப்பதற்கு மிகவும் அழகான தோற்றம் உடைய ஸ்ருதிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள். சமூகவலைத்தளக்களில் ஃபேன்ஸ் ஃபாலிங் அதிகம்.

சின்னத்திரைக்கு முன்பு, ஸ்ருதி முதன் முதலாக நடிகர் விஜய் நடித்திருந்த மாண்புமிகு மாணவன் படம் மூலம் அறிமுகம் ஆனார். அதற்கு முன்பு மலையான படத்திலும் நடித்துள்ளார்.

அதனைத்தொடர்ந்து, ஜித்தன் ரமேஷ் உடன் ஜெர்ரி படத்தில், நடிகர் பிரச்சன்னா உடன் காதல் டாட் காம் படத்தில் நடித்துள்ளார். திரைப்படங்களில் ஸ்ருதிக்கு கிடைக்காத வரவேற்பு சீரியல் மூலம் கிடைத்தது. ரசிகர்கள் ஸ்ருதியை தங்கள் வீட்டு பெண் போல் கொண்டாட தொடங்கினர்.

சன் டியில் ஒளிப்பரப்பான தென்றல் சீரியலில் துளசி கதாபாத்திரத்தை தற்போது வரை யாராலும் மறக்க முடியாது. அதனால்,தென்றல் சீரியலை மீண்டும் யூடுப் சேனலில் ஒளிபரப்பு செய்தார்கள். அந்த அளவிற்கு தென்றல் சீரியல் மக்களிடையே அதிக வரவேற்பையும், பாராட்டையும் பெற்றது. அதனைத் தொடர்ந்து விஜய் டிவியில் ஆபிஸ் சீரியல். அதில் ஸ்ருதியின் பெயர் ராஜி. கார்த்திக் ராஜி ஜோடி பற்றி கேட்கவே வேண்டாம்.

பல எபிசோடுகளை கடந்து ஆபிஸ் சீரியல் மெகா வெற்றி பெற்றது. அதற்கு பிறகு சன் டிவியில் ஸ்ருதி,
அபூர்வராகங்கள், அன்னக்கொடியும் ஐந்து பெண்களும்,போன்று பல சீரியல்களில் நடித்து வந்தார்.தற்போது ஒளிப்பரப்பாகும் அழகு சீரியல் மூலம் மீண்டும் ரசிகர் படையை சேர்த்து உள்ளார் .

ஆங்கராக தொடங்கிய அபிராமியின் பயணம்.. சர்ச்சை நாயகியானது பிக் பாஸில் தான்!

சீரியல்களில் குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து வரும் ஸ்ருதிக்கு மார்டன் என்றாலும் கொள்ளை பிரியம். ஆனாலும், சீரியலில் அவருக்கு கிடைக்கும் ரோல் குடும்பத்து பெண் போன்றவைகள் தான்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Sun tv azhagu serial sudha azhagu serial shruthi raj sun tv serial sun next

Next Story
நடிகன் என்பதைவிட தமிழன் என்பதே பெருமை: சத்யராஜ்! பாகுபலி-2 வெளிவர சிக்கல் இல்லை!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com