bigg boss abhirami venkatachalam instagram : பிக் பாஸ் சீசன் 3. விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகிய இந்த 3 ஆவது பிக் பாஸ் முதல் சீசனையே ஓவர்டெக் செய்து விட்டது எனலாம். காதல், சண்டை, தற்கொலை முயற்சி, அரசியல் என பலவிதமான சர்ச்சைகளை இந்த சீசன் பார்த்து விட்டது. இது எல்லாம் ரசிகர்களை ஒரு பக்கம் கடுப்பேற்றினாலும் சிலர் ஆர்வத்துடன் பார்க்கவும் தொடங்கினர்.
Advertisment
பிக் பாஸ் வீட்டில் பல்வேறு காதல் கதை ஓடிக்கொண்டு தான் இருந்தது. அந்த வகையில் பிக் பாஸ் வீட்டில் முதன் முதலாக காதல் கதையை ஆரம்பித்தது அபிராமி தான். இதனால் ஆரம்பத்தில் இருந்தே அபிராமி மீது கொஞ்சம் வெறுப்பான தோற்றமே இருந்து வந்தது. முதலில் கவினை காதலிப்பதாக விளையாடி வந்த அபிராமி அதன் பின்னர், முகெனிடம் நெருக்கம் ஆனார்.
அதன் பின்னர் அவரிடமும் சண்டைபோட்டுக் கொண்டு பிரிந்துவிட்டார். அபிராமி இருந்த வரை முகென் அவரை காதலிக்கவில்லை என்று ஆணித்தனமாக கூறியிருந்தார். பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின்னரும் முகெனுக்கு தனது ஆதரவை அளித்து வந்தார் அபிராமி. பிக் பாஸ் வீட்டில் இருந்து அபிராமி வெளியேறியபோது முகென் ஒரு சில நினைவு பரிசுகளை கொடுத்து அனுப்பி இருந்தார்.
Advertisment
Advertisements
இந்த பிரச்சனை இதோடு முடிந்து விட்டது. அபியும் முகெனும் இனி நல்ல நண்பர்கள் மட்டுமே என்பதை போல் தான் பேச்சுகள் தென்ப்பட்டன. மீண்டும் பிக் பாஸ் வீட்டில் நுழைந்த அபிராமி முகெனிடம் பழகிய முறையும் அப்படித்தான் காட்டியது. முன்பு நடந்த தவறுக்காக முகெனிடம் அபிராமி மன்னிப்பும் கேட்டிருந்தார்.
பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின்பு அபிராமி போட்ட முதல்பதிவு இதுதான். ”மக்களின் அன்பைப் பெறுவதற்காகவே நான் உள்ளே சென்றேன். அவர்களின் வார்த்தைகள் மற்றும் பாஸிட்டிவிட்டி ஆகியவற்றால் நான் அகம் மகிழ்ந்தேன். உண்மையைச் சொன்னால், ரேஷ்மா வெளியேற்றப்பட்டபோதே, நான் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற விரும்பினேன். என்னை வீட்டிற்கு அனுப்புமாறு கமல் சாரிடம் கேட்டுக் கொண்டிருந்தேன். நான் விளையாட்டின் கவனத்தை இழக்கிறேன் என்று அப்போதே உணர்ந்தேன். அதனால் தான் நான் வெளியேறும்போது நான் அழவில்லை” என்றார்.
அபிராமியின் முதல் சின்னத்திரை பயணம் ராஜ்டியில் தான் தொடங்கியது. அதன் பின்பு, இசை வெளியீட்டு விழா போன்ற பல திரைத்துறை சார்ந்த நிகழ்ச்சிகளை அபிராமி தொகுத்து வழங்கி இருக்கிறார். நன்கு நடனம் ஆட தெரிந்த இவர் பரதநாட்டிய கலைஞரும் கூட.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பு வரை அபி எந்தவித சர்ச்சையிலும் சிக்கியது இல்லை. ஆனால், பிக் பாஸ் வீட்டுக்கு சென்ற பின்பு தினம் தினம் புது புது சர்ச்சைகளில் அபிராமி சிக்கிக் கொள்வார். அது காதல் விஷயமாக இருந்தாலும் சரி, கேர்ள்ஸ் ஃபேரண்ட்ஸ்ஷிப் ஆக இருந்தாலும் சரி.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil