Azhagu Serial on Sun TV : சன் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ‘அழகு’ சீரியலில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் ட்விஸ்ட்டுகள் தாங்க முடியவில்லை என்கிறார்கள் சின்னத்திரை ரசிகர்கள்.
தன்னால் ஏற்பட்ட அனைத்துப் பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து, அனைவரிடமும் இரக்கத்தைப் பெறுவதற்காக, ஜெயிலில் ஆளை வைத்து அடி வாங்கிக் கொள்கிறாள் பூர்ணா. பின்னர் அவர்கள் அடித்ததால், இனி தன்னால் நடக்க முடியாது என்றுக் கூறி, சக்கர நாற்காலியில் அமருகிறாள். தான் முன்பு போல் இல்லை என்பதை மீண்டும் மீண்டும் கூறி, அதை மற்றவர்களையும் நம்ப வைக்கிறாள்.
ரவி வர்மா ஓவியங்களுக்கு உயிர் கொடுத்த 11 நடிகைகளும் நடனக் கலைஞர்களும்!
Advertisment
Advertisements
என்னால் தான் எல்லா பிரச்னைகளும் என்று தவறுகளை ஒப்புக் கொண்ட பூர்ணா, அர்ச்சனா குடும்பத்தினரிடம் மன்னிப்புக் கேட்கிறாள். அதோடு தனது கொழுந்தன் திருநாவோடு வாழ்வதற்கு, அர்ச்சனாவை தங்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கும்படியும் கேட்கிறாள். இது ஒருபுறமிருக்க, வீணாக டான்ஸ் ஆடி, சுதாவிடம் வசமாக மாட்டியும் கொண்டாள் பூர்ணா. அவள் ஆடியதை வீடியோ எடுத்து வைத்திருக்கும் சுதா, அதைக்காட்டி பூர்ணாவை பயமுறுத்துகிறாள்.
இதற்கிடையே சுதாவுடன் நின்று பூர்ணா பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்த மகேஷுக்கு அதிர்ச்சி. அவள் தான் நடக்க வேண்டுமென்று ஆசைப்பட்டால், அதனால் தான் மெதுவாக எழுந்து நிற்கிறாள் என அவனை சமாளிக்கிறாள் சுதா. இதனால் மகேஷ் ஒரு முடிவுக்கு வருகிறான். பூர்ணா நடக்க ஆசைப்படுகிறாளே என நினைத்து சிட்டியிலேயே பெரிய மருத்துவரிடம் அழைத்துச் செல்கிறான். அந்த டாக்டர் சகுந்தலா தேவியின் (பூர்ணாவின் அம்மா) பள்ளித் தோழி. பூர்ணாவை பரிசோதித்த மருத்துவர், அவளுக்கு எந்த பிரச்னையும் இல்லை என்பதைக் கண்டறிந்து, என்ன விஷயம் என அதட்டிக் கேட்கிறார். இதை யாரிடமும் சொல்ல வேண்டாம், பதிலுக்கு எவ்வளவு வேண்டுமானாலும் பணம் தருகிறேன் என்கிறாள் பூர்ணா.
கோபமடைந்த மருத்துவர், பூர்ணாவின் அம்மா சகுந்தலா தேவியிடம் அனைத்தையும் சொல்லி விடுகிறார். இந்த நாடகம் மொத்த குடும்பத்துக்கும் தெரிய வருமா பொருத்திருந்து பார்ப்போம்.