அழகு சீரியல் பிரபலத்தின் அடுத்த சீரியல் இது தான்!

கொரோனாவால் சில சீரியல்கள் நிறுத்தப்பட்டன. அதில் சன் டிவி-யின் அழகு சீரியலும் ஒன்று.

கொரோனாவால் சில சீரியல்கள் நிறுத்தப்பட்டன. அதில் சன் டிவி-யின் அழகு சீரியலும் ஒன்று.

author-image
WebDesk
New Update
Azhagu Serial Thiruna's Next Serial announced

சன் டிவி அழகு சீரியல் அவினாஷ்

Azhagu Serial Actor Avinash: சன் டிவி-யில் ஒளிபரப்பாகிய அழகு சீரியலை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். ரேவதி, ஸ்ருதி ராஜ், தலைவாசல் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்த அந்த சீரியலில், வி.ஜே.சங்கீதா வில்லியாக நடித்திருந்தார். இந்த சீரியல்ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.

இவங்க எல்லாரும் டாக்டர் பட்டம் வாங்கின நடிகர்கள்!

Advertisment

ஆனால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தொலைக்காட்சித் தொடர்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. சில சீரியல்களில் கதை மற்றும் நடிகர்களின் மாற்றங்களுடன் மீண்டும் ஒளிபரப்பாகின. இன்னும் சில சீரியல்களோ நிறுத்தப்பட்டன. அதில் அழகு சீரியலும் ஒன்று.

அந்த சீரியலில் திருநா என்ற முக்கிய வேடத்தில் நடித்து வந்த நடிகர் அவினாஷ், கலர்ஸ் தமிழ் டிவியில் ஒளிபரப்பாகும் ’அம்மன்’ தொடரில் தான் நடிப்பதாக இன்ஸ்டாகிராமில் அறிவித்துள்ளார்.

உடல் நலக்குறைவால் சின்னத்திரை நடிகர் வடிவேல் பாலாஜி மரணம்!

Advertisment
Advertisements

”நீங்கள் அனைவரும் என்னை “திருநா”வாக நேசித்தீர்கள், அழகு சீரியலில் எனக்கும் என் அப்பாவுக்கும் இடையிலான அழகான சண்டைகள் மற்றும் நகைச்சுவைகளையும் ரசித்திருப்பீர்கள். அதே போன்று ஆனால் வித்தியாசமான ஒன்று மீண்டும் வருகிறது !!! கலர்ஸ் டிவி-யின் அம்மன் சீரியலில் “அரவிந்துக்கு” உங்கள் ஆசீர்வாதங்கள், அன்பு மற்றும் ஆதரவு ஆகியவற்றை வழங்குங்கள்” என தனது இன்ஸ்டாகிராமில் தெரிவித்திருக்கிறார்.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Tv Serial Sun Tv

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: