Sun TV Chocolate tamil Serial, தமிழ் சீரியல், சன் டிவி, tamil serial news
Sun TV Chocolate Serial News : தாலி கட்டிட்டா முடிஞ்சுதுன்னா கதை முடிஞ்சதுன்னு இன்னும் பெரும் பணக்காரி விக்ரம் அம்மாவுக்கு தெரியாம போயிருச்சா என்ன? சாக்லேட் சீரியலில் இனியாவை சாக்லேட் ஸ்வீட் செய்வதில் எக்ஸ்பர்ட் என்று விக்ரம் காதலிக்கற மாதிரி நடிச்சு கல்யாணம் செய்துகிட்டு வந்துட்டான். பிசினெஸ் முற்றிலுமாக படுத்துவிட, விக்ரம் அப்பா சொல்லாமல் கொள்ளாமல் தலைமறைவாகி விடுகிறார். முழுப் பொறுப்பும் விக்ரம் தலையில் விழ, கடனை அடைக்கணும், பிசினெஸை தூக்கி நிறுத்தணும், இப்படி பல சுமைகள். அதனால் தான் இனியாவை வச்சு சாக்லேட் ஸ்வீட் செய்யும் பிசினெஸ் ஆரம்பிச்சுட்டு அடுத்து இனியாவை விரட்டி விட்டு விடுவது இவங்க பிளான்.
விக்ரமை காதலிக்கும் பல்லவியால் ஒரு கதையும் நடக்காது என்று தெரிந்தும், அவள் காதலுக்கு முழுமையாக சப்போர்ட் செய்யும் விக்ரமின் அம்மா, இனியாவிடம் இருக்கும் சாக்லேட் ஸ்வீட் செய்யும் திறமையை வைத்து பிசினெஸை டெவலப் செய்ய திட்டம் போடறாங்க. ஏழை பெண் என்றாலும் மானம் ரோஷம் உள்ளவள் இனியா. இவளை வீழ்த்த காதல் ஆயுதத்தை கையில் எடுக்கறாங்க பணக்கார விக்ரமும், அவனது அம்மாவும். இதுக்கு காதலி பல்லவியும் கூட்டு.
Advertisment
Advertisements
சாக்லேட் ஸ்வீட் செய்யும் ஃ பார்முலாவை பிசினெஸ் மூளையா முதலீடு செய்த பின்னர் இனியாவை கழட்டி விட்டுவிட திட்டம் போட்டு கல்யாணம் செய்துக் கொண்டும் வந்தாச்சு. விக்ரம் மனசாட்சி அவனை அவ்வப்போது தட்டி தட்டி உசுப்பி விடுது. காதலி பல்லவி ஒரு பக்கம் நான் தான் உண்மை, இனியா தாற்காலிகம் தான் என்று தட்டி தட்டி டார்ச்சர் செய்கிறாள். இனியாவிடம் இருந்து பிசினெஸ் ட்ரிக்கை வாங்குவதற்குள் பல்லவி செய்யும் டார்ச்சரில் விக்ரம் நிலை ஐயோ பாவம் தான்.
இந்த சமயத்தில் ஒவ்வொரு நாளும் இப்படியே கடந்து போகும் போது தான் விக்ரமின் அம்மா பெரிய மனுஷி சொல்றாங்க, ஒவ்வொரு நாளும் அவளை பொண்டாட்டி பொண்டாட்டின்னு பொய்யா கட்டிக் காப்பாத்திக்கிட்டு வீட்டில் உட்கார வச்சுக்கிட்டு இருக்க முடியாதுடா. சீக்கிரம் கை எழுத்து வாங்கிடு விக்ரம்னு சொல்லித் தர்றாங்க. இனி இதை கோர்ட்தான் முடிவு செய்யும்!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”