Sun TV Chocolate Serial : மதியம் 3 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த சாக்லேட் சீரியல் இனி தினமும் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகும் என்று சன் டிவி அறிவித்துள்ளது. ஆனால், இதுவரை பார்க்காமல் இருந்தவர்களுக்கு மகிழ்ச்சி.. பார்த்து வந்தவர்களுக்கு மறுபடியும் முதலில் இருந்தா என்று கேட்பது மாதிரி முதல் எபிசோடில் இருந்து இந்த சீரியலை ஒளிபரப்ப உள்ளது சன் டிவி. நிறம் கம்மியான ஒரு பெண்ணின் கதையை குறிப்பது போல ஆரம்பத்தில் கதை இருந்தது . இப்போதும் கறுப்பு மேக்கப்பில் தான் ஹீரோயின் நடித்து வருகிறார் என்றாலும், நிறத்தால் எந்த பேதமும் கதையில் பெரிதாக காட்டப்படவில்லை.
பணக்கார தொழிலதிபரான நாயகன் விக்ரம் காதலிக்க ஏற்ற பெண்ணாக நாயகி இனியா இல்லை என்பதற்காக ஆரம்பத்தில் கறுப்பு பெண் என்று இனியாவை காண்பித்து இருப்பது, சாக்லேட் ஸ்வீட் செய்யும் திறமைக்காக மட்டுமே இனியாவை விக்ரம் காதலிக்கிறான் எனும்போது அவளிடம் ஒரு குறை வேண்டும் என்று அவளை கறுப்பாக காண்பித்தது இப்போது எடுபடும்படியாக இல்லை. தெலுங்கு சீரியலில் வெற்றியான ஒரு கதையை அப்படியே தமிழில் ரீமேக் செய்து எடுத்து வருகிறார்கள். இந்த சீரியலை அண்ணாமலை படப் புகழ் சுரேஷ் கிருஷ்ணா இயக்கி வருகிறார்.
வழக்கமான சீரியல் போல சின்ன வட்டத்துக்குள் என்று இல்லாமல், கலர்ஃபுல் காட்சிகள் என்று படமாக்கப்பட்டு இருப்பதால், இந்த சீரியலுக்கு மவுசு அதிகம் இருந்தது. இதை சன் டிவி ஆரம்பத்திலேயே இரவு நேரத்தில் ஒளிபரப்பும் என்று எதிர்பார்த்த நிலையில், மதியம் ஒளிபரப்பியது. இப்போது லாக்டவுன் அமலில் இருக்கும் நேரத்தில், மதியம் புது எபிசோடுகளாக ஒளிபரப்ப முடியாத நிலையில், மறுபடியும் முதலில் இருந்து என்று சாக்லேட் சீரியலை சன் டிவி ஒளிபரப்ப இருக்கிறது.