சன் டிவி சீரியல் நடிகை ஹிமா பிந்து வெள்ளித்திரை ஹீரோயினாக அறிமுகமாகிறார். இதனையடுத்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Advertisment
கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பான இதயத்தை திருடாதே சீரியல் மூலமாக பாப்புலர் ஆனவர் ஹிமா பிந்து. அதனை தொடர்ந்து தற்போது சன் டிவியில் இலக்கியா சீரியலில் அவர் நடித்து வருகிறார்.
அடுத்தடுத்து வெற்றிகரமான சீரியல்களில் நடித்து வரும் ஹிமா பிந்துவுக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்து வகிறார்கள். குறிப்பாக அவரது சிறப்பான நடிப்பு இளைஞர்களை அதிகம் கவர்ந்து வருகிறது.
Advertisment
Advertisements
இந்நிலையில் ஹிமா பிந்து சினிமாவில் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்துள்ளார். ஹிமா பிந்து இதற்கு முன்பே குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்து இருந்தாலும் தற்போது ஹீரோயினாக முதல் முறையாக நடிக்க தொடங்கியுள்ளார்.
காமெடி கிங் கவுண்டமணி நீண்ட காலம் கழித்து தற்போது நடிக்கும் ஒத்த ஓட்டு முத்தையா படத்தில் தான் ஹிமா பிந்து ஹீரோயினாக ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். அந்த படத்தின் பூஜையில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஹிமா பிந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனையடுத்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.