இலக்கியா சீரியலில் நடித்து வரும் முக்கிய பிரபலம் அந்த சீரியலில் இருந்து விலகுவதாகவும், அவருக்குப் பதில் மற்றொரு பிரபலம் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Advertisment
சன் டிவியில் மதிய நேரத்தில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல்களில் ஒன்று இலக்கியா. ஹிமா பிந்து கதாநாயகியாக நடிக்கும் இந்த சீரியலில், சித்தி 2 சீரியல் நடிகர் நந்தன் லோகநாதன் ஹீரோவாக நடித்து வருகிறார். விறுவிறுப்பான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில், முக்கிய கதாபாத்திரத்தில், ரூபாஸ்ரீ, மீனா வேமுறி, சுஷ்மா நாயர், ஜெய் ஸ்ரீனிவாசா, காயத்ரி ப்ரியா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
இந்தநிலையில், ஹீரோவுக்கு தம்பியாக நடித்து வரும் ஜெய் ஸ்ரீனிவாசா, தற்போது 'இலக்கியா' சீரியலில் இருந்து விலகியுள்ளார். ஜெய் ஸ்ரீனிவாசா விரைவில் ஒளிபரப்பாக உள்ள மீனா என்ற புதிய தொடரில், ஹீரோவாக உள்ள நிலையில், தற்போது இலக்கியா சீரியலில் இருந்து விலகி உள்ளார். ஜெய் ஸ்ரீனிவாசாவுக்கு பதிலாக இனி சன் டிவியின் சுந்தரி சீரியலில் கிருஷ்ணா கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் அரவிஷ் நடிக்க உள்ளார்.
இதுகுறித்து ஜெய் ஸ்ரீனிவாசா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "அனைவருக்கும் வணக்கம், நான் இலக்கியா சீரியலில் இருந்து அதிகாரப்பூர்வமாக விலகுகிறேன் என்று உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன்... இலக்கியா சீரியலில், கார்த்திக் கதாபாத்திரத்தை எனக்குக் கொடுத்ததற்கு நன்றி... ஹிமா பிந்து, நந்தன் லோகநாதன் மற்றும் ரூபாஸ்ரீ ஆகியோரை நான் மிகவும் மிஸ் செய்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.
இது நாள் வரை கார்த்திக் கதாபாத்திரத்திற்கு பெரிய முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. தற்போது அரவிஷ் நடிக்க உள்ள நிலையில், இனி வரும் நாட்களில், கார்த்திக் கதாபாத்திரம் முக்கிய கதாபாத்திரமாக மாறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil