/tamil-ie/media/media_files/uploads/2019/08/Kanmani-Serial.jpg)
Kanmani Serial
Kanmani Serial: சன் டி.வி-யில் ஒளிபரப்பாகி வரும் ’கண்மணி’ சீரியலில் ஒருவழியாக சவுந்தர்யாவுக்கு திருமணம் பேசி முடித்து விட்டார்கள்.
தர்மதுரை ஐயா இறந்துவிட, வீட்டில் அவரது தம்பி மனைவி கிருஷ்ணவேணியின் அதிகாரம் கொடிக்கட்டி பறக்கிறது. தர்மதுரையின் மகள் சவுந்தர்யா காதலித்த ஆகாஷை தனது மகள் வளர்மதிக்கு திருமணம் செய்து வைக்க விரும்புகிறாள் கிருஷ்ணவேணி. இந்த கல்யாணத்துக்கு நீதான்கா ஆகாஷை சம்மதிக்க வைக்கணும்னு ரொம்ப ஆசையாக சவுந்தர்யாவிடம் கேட்கிறாள் வளர்மதி.
இதற்காக ஆகாஷை தனியாக சந்திக்கும் சவுந்தர்யா, ”நாம எல்லாம் படிச்சவங்க. நமக்கு எல்லா பக்குவமும் இருக்கணும் ஆகாஷ். என் தங்கச்சி வளர்மதியை கல்யாணம் செய்துகிட்டா, என்னை பார்க்கணும்ன்னு தானே நீ சங்கடப்படறே.. நீயும் நானும் இதுவரைக்கும் நல்ல ஃபிரண்ட்ஸாத்தானே இருக்கோம். இனி அப்படியே இருக்கலாம்.. நீ வளர்மதியை கல்யாணம் செய்துக்கோ. அவளுக்கு உன்னை பிடிச்சு இருக்கு” என்கிறாள்.
பின்னர் ஆகாஷ் வளர்மதியை கல்யாணம் செய்துக்க சம்மதிக்க, இரு வீட்டாரும் சேர்ந்து நிச்சயதார்த்தம் செய்கிறார்கள். அப்போது சவுந்தர்யா - கண்ணன் திருமணம் குறித்த விவாதம் நடைபெறுகிறது. ஆளாளுக்குப் பேச, கண்ணணின் முடிவை எதிர்பார்க்கிறார்கள் அனைவரும். இந்த விஷயத்துல கண்ணன் தான் பேசணும் என்கிறான் ஆகாஷ்.
அப்போது, சவுந்தர்யவைப் பார்த்து, ”சவுண்டு நீ என்ன சொல்றன்னு கேட்க, என் விஷயத்துல நான் எப்போ மாமா முடிவு எடுத்து இருக்கேன். நீதானே எனக்கு நல்லது எதுன்னு முடிவு எடுப்ப.. இப்போவும் நீயே சொல்லு” எனக் கூறுகிறாள் சவுந்தர்யா. ”அப்போ நானே சொல்லிடறேன்னு சொன்ன கண்ணன், ”சவுண்டை நான் கல்யாணம் செய்துக்கறேன்” என சொல்ல அனைவர் மனதிலும் மகிழ்ச்சி பூக்கிறது!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.