Tamil Serial News : சன் டிவி-யில் ஒளிபரப்பாகும், ரோஜா சீரியலில் அர்ஜுன் நினைத்த மாதிரி அனு என்கிற பிரியா, ஹைதராபாத் பேலஸை பார்த்து இதுக்கு நான் சொந்தக்காரியா? என்று கப்புன்னு அர்ஜுன் விரிச்ச வலையில் விழுந்துட்டா.. டைகர் மாணிக்கம் சொத்துக்கள் அனுவுக்கு இப்போ துச்சமாக தெரியுது. நம்ப முடியலை.. இருந்தாலும் சீரியல்னு வந்தாச்சு நம்பித்தான் ஆகணும்.. இவ்ளோ பெரிய பேலசுக்கு அர்ஜூனுக்கு வாடகை குடுத்து கட்டுப்படியாகுமா... இல்லை சாகசக்காரி எதையும் தூண்டித் துருவி பார்க்கும் அனு இந்த கட்டுக்கதையை எப்படி நம்புவாள் என்று நமக்குள் எழும் கேள்விகளை அப்படியே லாஜிக் பார்க்ககாமல் காற்றில் பறக்க விட்டு விட்டு சீரியலை பார்க்க வேண்டும்.
ரோஜா சீரியல் ஏற்கனவே கலர்ஃபுல் காட்சிகளாகத்தான் இருக்கும். இப்போது அவுட்டோர் போய், கண்களுக்கு விருந்து தர்றாங்க. வீட்டில் இருந்து கொஞ்சம் என்ஜாய் பண்ணுங்க. இது மட்டுமா குல்ஃபி ரோஜா, அர்ஜூனுடன் செய்யும் ரொமான்ஸ். அச்சுக்குட்டி அர்ஜுன் புருஷனா ரோஜாவிடம் செய்யும் சில்மிஷம் அதுவும் சினிமா பாணியில் நல்லாவே இருக்கும். அர்ஜுன் கேரக்டர் கொஞ்சம் குறும்பு, என்றாலும் பாட்டியிடம் சவால் விடும்போது நக்கல் கிண்டல் என்று நடிப்பில் அசத்துகிறார்.
தமிழ் சரியாக பேச வராததால் அவர் பேசுவதற்கு முன்பு அவரது ஆக்ஷன் முன்னிலை வகிக்கிறது. இது தெரியாதவாறு அட்ஜஸ்ட் செய்துகொன்டு நடிக்கிறார் இந்த நாயகன். பாட்டி... பிரியாவை இனி நான் எப்போது பார்க்கப் போகிறேனோ, என்று பாட்டியின் தோளில் சாய்ந்துக் கொண்டு பேச, டேய்.. என்று அன்னபூரணி பாட்டி அதட்ட.. இல்லை பாட்டி.. அனுவை பிரியான்னு அவங்க நிரூபிச்சுட்டாங்கன்னா.. அவங்க நினைக்கும்போது தான் நாம் பிரியாவை பார்க்க முடியும் அதை சொன்னேன் பாட்டி என்று அர்ஜுன் பாட்டியின் கோவத்தை கிளறுவது என்று ரோஜா சீரியல் என்ஜாய் செய்து பார்க்கற மாதிரி இருக்கிறது. டைம்பாஸுக்கு ரோஜா சீரியலை பார்க்கலாம்.
ரோஜா அர்ஜுன்.. இளமைத் துள்ளல் போரடிக்காமல் சீரியலை பார்க்க வைக்குது..
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்"