/tamil-ie/media/media_files/uploads/2019/08/sun-tv-roja-serial-1.jpg)
suntv roja serial roja
Sun TV Roja Serial: சீரியல்களின் ரேட்டிங்கில் ‘கிங்’, சன் டிவி.தான் இன்றும்! அதிலும் அதில் வருகிற ரோஜா சீரியலுக்கு ரசிகர்கள் எண்ணிக்கை அதிகம். அதில் ரோஜாவாக வருகிற பிரியங்காவும், கணவராக வருகிற சிபு சுரேனும் ரசிகர்களையும் ரசிகைகளையும் வெகுவாக கவர்கிறார்கள். ஓராண்டைக் கடந்து வெற்றிகரமாக பயணிக்கும் இந்த சீரியலின் வெற்றியை அண்மையில் இந்தக் குழுவினர் கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார்கள்.
அனாதை ஆசிரமத்தில் வளர்கிற பெண், ரோஜா. அங்கு ஒரு பிரச்னை ஏற்பட, அங்கிருந்து வெளியேறுகிறார். இவரது சிறு வயது உடை, போட்டோ உள்ளிட்டவற்றை அங்கிருந்து எடுத்துக்கொண்டு அன்னபூரணியிடம் அடைக்கலம் ஆகிறார் அனு. தன்னை அன்னபூரணியின் மகள் வயிற்றுப் பேத்தி என கூறிக் கொள்கிறார். சிபு சுரேனுக்கு அனுவை திருமணம் செய்து வைக்க முயற்சிக்கிறார் அன்னபூரணி.
இந்தச் சூழலில்தான் ரோஜாவை மனைவியாக ஒப்பந்தம் போட்டுக்கொண்டு, வீட்டுக்கு அழைத்து வருகிறார் சிபு. அனாதையாக அறியப்படும் ரோஜா, அதன் காரணமாகவே அந்த வீட்டில் எதிர்கொள்ளும் சிக்கல்கள் அனைவரையும் உச் கொட்ட வைக்கின்றன. அதேசமயம், சிபு சுரேன் தனது மனைவி (?) ரோஜாவுக்காக சிங்கமாக சீறும் காட்சிகள் பார்க்கிறவர்களின் டெம்போவை எகிற வைக்கிறது.
அரவிந்துடன் விவாகரத்து: இன்னொரு திருமணம் செய்துக் கொள்கிறாரா தாமரை?
ரோஜாவை வீட்டை விட்டு துரத்த அன்னபூரணி அன் கோ வகுக்கும் வியூகங்களும், சிபு சுரேன் கொடுக்கும் பதிலடிகளும் இன்னமும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஓராண்டைக் கடந்து வெற்றிகரமாக பயணிக்கும் இந்த சீரியலின் வெற்றியை அண்மையில் இந்தக் குழுவினர் கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார்கள். திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 7 மணி முதல் 7.30 மணி வரை பிரைம் டைமில் இந்த சீரியலைப் போட்டு ஜமாய்த்துக் கொண்டிருக்கிறது சன் டி.வி!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.