scorecardresearch

‘நடிகையை பார்த்தாலே இப்படித்தான் கேள்வி கேப்பீங்களா?’ வெடித்து கொந்தளித்த சீரியல் நடிகை

இது போன்ற கேள்வியை கேட்டு நடிகைகளை மனதாலும், உடம்பாலும் ஏன் சாவடிக்கிறீர்கள்; நடிகை காயத்ரி கிருஷ்ணன்

Gayathri Krishnan
நடிகை காயத்ரி கிருஷ்ணன் (புகைப்படம் – இன்ஸ்டாகிராம்)

ஒரு நடிகையை பார்த்தாலே இந்த கேள்வியை தான் கேட்க தோணுமா, நீங்கள் இப்படி கேட்டுவிட்டால் உடனே அந்த நடிகை கண்ணீர் வடித்து பதில் சொல்ல வேண்டுமா என சீரியல் நடிகை காயத்ரி கிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.

சமீப காலங்களில் ஒரு நடிகையை பேட்டி கண்டாலே அவரிடம் உங்களுக்கு அட்ஜஸ்ட்மென்ட் டார்ச்சர் இருந்ததா என்ற ஒரு கேள்வி கட்டாயமாக முன் வைக்கப்படுகிறது. அப்படிப்பட்டவர்களுக்கு காட்டமாக பதில் அளித்திருக்கிறார் எதிர் நீச்சல் சீரியலின் நடிகை காயத்ரி கிருஷ்ணன்.

இதையும் படியுங்கள்: அந்த சீரியலில் நான் நடிச்சிருக்க கூடாது: நடிகை நித்யா ரவீந்தர்

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர் நீச்சல் சீரியல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதில் ஜான்சி ராணி என்னும் கேரக்டரில் நடித்து வருபவர் காயத்ரி கிருஷ்ணன். இவர் அயலி என்ற வெப் சீரிஸிலும் நடித்துள்ளார். இந்த நிலையில், சமீபத்தில் ஒரு பேட்டியின் போது தன்னிடம் கேட்கப்பட்ட அஜஸ்ட்மென்ட் பற்றிய கேள்விக்கு காயத்ரி கிருஷ்ணன் வெளிப்படையான பதிலை தெரிவித்துள்ளார்.

அதாவது, எவ எவன் கூடயோ அட்ஜஸ்ட்மென்ட் செய்துவிட்டு போறா, உங்களுக்கு என்னடா வந்துச்சு என ஆவேசமாக அவர் கேள்வி எழுப்பி இருக்கிறார். அட்ஜஸ்ட்மென்ட் செஞ்சா நடிக்கிறா, இல்லன்னா வீட்டுக்கு போறா, அது அவளோட விருப்பம். இதுல உங்களுக்கு என்னடா பிரச்சனை. ஒரு நடிகையை பார்த்தாலே இந்த கேள்வியை தான் கேட்க தோணுமா என கொந்தளித்திருக்கிறார் காயத்ரி கிருஷ்ணன்.

மேலும் நீங்கள் இப்படி கேட்டுவிட்டால் உடனே அந்த நடிகை கண்ணீர் வடித்து பதில் சொல்ல வேண்டுமா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். தொடர்ந்து இது போன்ற கேள்வியை கேட்டு நடிகைகளை மனதாலும், உடம்பாலும் ஏன் சாவடிக்கிறீர்கள் என ஆக்ரோஷமாக தன் கருத்தை தெரிவித்துள்ளார். அவரது இந்த தைரியமான பதில் தற்போது ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்று வருகிறது.

சில யூடியூப் சேனல்கள் நடிகைகளிடம் இப்படி ஒரு கேள்வி கேட்பதையே வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அதன் மூலம் பரப்பரப்பை ஏற்படுத்தி சிறு விஷயத்தைக் கூட ஊதி பெரிதாக்கி விடுகிறார்கள். இதனால் பல நடிகைகள் இது குறித்து பேசவே தயங்கி வருகின்றனர். அந்த வகையில் காயத்ரி கிருஷ்ணன் தன்னுடைய பாணியில் இதற்கு கொடுத்த பதிலடி இனிமேல் இது போன்ற கேள்வி கேட்பவர்களுக்கு ஒரு சாட்டை அடியாக அமைந்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Sun tv serial actress gayathri krishnan slams who ask adjustment questions