New Update
/tamil-ie/media/media_files/uploads/2020/01/Chithi-2-serial-review.jpg)
sun tv serial chithi
சந்திரகுமாரி சீரியல் படு ஃபிளாப்.. இதனால் இந்த சீரியலை அவசர அவசரமாக முடித்து வைக்கவும் நேர்ந்தது.
sun tv serial chithi
sun tv serial chithi : சன் டிவியின் சூப்பர் டூப்பர் ஹிட் சீரியல் சித்தி. 90ஸ் கிட்ஸ் விருப்பமான சீரியல், இவர்களின் பால்ய பருவத்து நினைவுகளைத் தூண்டி விடும் சீரியல் என்று கூட பலரும் பேசிக்கொள்வது உண்டு. சித்தி சீரியலைத் தயாரித்து நடித்து, செகண்ட் இன்னிங்ஸ் வெற்றி பெற்றார் நடிகை ராதிகா. இந்த சீரியலுக்கு பிறகு இவருக்கு வந்த பட வாய்ப்புக்கள் ஏராளம். அடுத்தடுத்து இவர் சன் டிவியில் பல சீரியல்களை தயாரித்து, அதில் நடித்தும் வந்தார். அத்தனையும் வெற்றி சீரியல் லிஸ்டில் இடம் பிடிதத்து. என்றாலும், சந்திரகுமாரி சீரியல் படு ஃபிளாப்.. இதனால் இந்த சீரியலை அவசர அவசரமாக முடித்து வைக்கவும் நேர்ந்தது.
தாய் எனும் ஸ்தானம்தான் உலகிலேயே பெருசு!
சித்தி 2
முழு எபிசோடிற்கு: https://t.co/utDtkBldp8 #SunTV #SunTVThrowback #Chithi2 #Chithi2OnSunTV pic.twitter.com/iy23aVvx5w— Sun TV (@SunTV) June 30, 2020
சிறிது இடைவெளிக்குப் பின்னர் சித்தி 2 சீரியல் ஒளிபரப்பாகத் துவங்கிய ஓரிரு மாதத்தில் கோவிட் 19 தொற்று லாக்டவுன் ஆரம்பமாகியது.இதன் முதல் எபிசோட் சன் டிவியின் டிவிட்டர் பக்கத்தில் வெளியாகி இருக்கிறது.அதில் உலக நாயகன் கமல்ஹாசனுடன் சிவ ராத்திரி தூக்கம் ஏது என்று பாடி நடித்த நடிகை ரோகிணி நடித்து இருக்கார். சாரதாவின் அக்காவாக நடித்து இருக்கும் இவர் ஒரே எபிசோடோடு சரி. இவருக்கு பதிலாக இவரின் குழந்தைகளை பார்த்துக்கொள்ளும் பொறுப்பில் இருக்கும் ராதிகா, அக்காவுக்கு பதில் மாமாவை கல்யாணம் செய்துக்கொண்டு அக்கா ஸ்தானத்தில் மனைவியாகவும், தாயாகவும் இருக்கிறார். குழந்தைகள் இவரை சித்தி என்று அழைக்கிறார்கள்.
தவ வாழ்வு கொண்ட காந்தாரி கண் திறக்கும் தருணம்...!
இப்படி என்ட்ரி கொடுக்கும் சித்தி, எல்லாராலும் சித்தி என்று அழைக்கப்படுகிறார். பேத்திக்கு சித்தி, அக்கா பிள்ளைகளுக்கும் சித்தி...எடுத்து வளர்க்கும் மகள் வெண்பாவுக்கும் சித்தி..இப்படியாக போகிறது கதை. காளை காளை முரட்டு காளை என்று சூப்பர் ஸ்டாருடன் பாடி நடித்த ரோகிணியை பார்க்கையில் ஒரு சந்தோசம்..
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.