புஜ்ஜி குட்டி... குல்ஃபி... வெட்கத்தில் சிவந்த ரோஜா!

Sun TV Roja: பல சீரியல்கள் பார்த்து வந்தாலும் ஒரு சில சீரியல்கள் பார்க்கும்போது கலர்ஃபுல்லா எதாவது ஒரு வித்தியாசம் தெரியும்.

Sun TV Roja: பல சீரியல்கள் பார்த்து வந்தாலும் ஒரு சில சீரியல்கள் பார்க்கும்போது கலர்ஃபுல்லா எதாவது ஒரு வித்தியாசம் தெரியும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
suntv roja serial roja

suntv roja serial roja

Tamil Serial News: சன் டிவியின் ரோஜா சீரியல் நாயகன் சிபு சுரேன் கல்லூரி பெண்கள் அதிகம் லைக் போடற நாயகனா இருக்கார். ரோஜா சீரியலில் இவருக்கு ஜோடியா நடிக்கும் பிரியங்காவும் ஆண்கள் விரும்பும் ஹீரோயினாக இருக்கார்.

‘சரியான நேரத்தில் சரியான படம்’ : ‘ஜிப்ஸி’யை புகழ்ந்த மு.க.ஸ்டாலின்!

Advertisment

இருவரும் செம ஜோடிப் பொருத்தம் என்று ரசிகர்கள் சீரியலை தொடர்ந்து பார்த்து வருகிறார்கள். அந்த வகையில் மட்டும் இல்லாமல் ரோஜா ஹிட் சீரியல் என்றே பார்க்கப்படுகிறது. கதைப்படி நாயகன் அர்ஜுன் பாட்டியை சமயம் கிடைக்கும் போதெல்லாம் செம கலாய்.. நக்கல் பேச்சு என்று ஜமாய்க்கிறார்.

அனு செண்பகத்தம்மா பொண்ணு இல்லை... அன்னபூரணி பாட்டியின் பேத்தி இல்லைன்னு நம்ப வைக்க போராடறாங்க அர்ஜுனும், ரோஜாவும். அனு தான் அன்னபூரணியின் பேத்தி என்பதை அவ்வப்போது அழுது நாடகமாடி நிரூபிப்பதும், பாட்டி நீ அழாத கண்ணு.. நீதான் என் பேத்தி என்று அனுவின் நடிப்பை நம்பி பேசுவதும் என்று இதே நம்பகத் தன்மையில் ரோஜா தினமும் மணத்துக்கொண்டே இருக்கிறது.

பல சீரியல்கள் பார்த்து வந்தாலும் ஒரு சில சீரியல்கள் பார்க்கும்போது கலர்ஃபுல்லா எதாவது ஒரு வித்தியாசம் தெரியும். ரோஜா முழுக்க முழுக்க பார்க்க கலர்ஃபுல்லா கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்கிறது. ஒண்ணுமே இல்லை என்றாலும்... கேமிராவின் படப்பிடிப்பும், கலர் கரெக்ஷனும் சூப்பர்.

Advertisment
Advertisements

போன் வருது அர்ஜுனுக்கு.. யாரு சார் போன்ல என்று வாங்கி பார்க்கிறாள். மீனாட்சின்னு வருது. உடனே போனை பிடுங்கிக்கொண்டு யாரு சார் மீனாட்சி.. யாரு சொல்லுங்க சார் அந்த மீனாட்சி என்று சிணுங்குகிறாள். ரோஜா.. ரோஜா என்று அவன்சொல்ல வர, எனக்குத் தெரியாம யாரு சார் அந்த மீனாட்சி என்று மறுபடியும் சிணுங்கல்.

ரோஜா நம்ம ஆஃபீஸ்ல ஆடிட்டர் அங்கிள் இருக்காருல்ல அவர் பேரு மீனாட்சி சுந்தரம் அதைத்தான் சுருக்கமா மீனாட்சின்னு போட்டு சேவ் பண்ணி இருக்கேன்னு சொல்றான் அர்ஜுன். வெட்கப்பட்ட ரோஜா... சாரி சார்னு சொல்லிட்டு.. என் பேரை எப்படி சார் சேவ் பண்ணி வச்சு இருக்கீங்கன்னு கேட்கிறாள். இவன் சொல்ல மாட்டேன்னு சொல்ல, நீங்க என்ன சொல்றது நானே பார்த்துக்கறேன்னு இவள் போனை எடுத்து பார்த்தால் குல்ஃபின்னு போட்டு பண்ணி வச்சு இருக்கான்.

ரோஜா என்னை கேட்டியே.. என் பேரை நீ எப்படி சேவ் பண்ணி வச்சு இருக்கேன்னு கேட்கிறான். போங்க சார் சொல்ல மாட்டேன்னு இவள் சொல்கிறாள். நீ என்ன சொல்றது.. நானே பார்த்துக்கறேன்.. என்று சொல்லி, தனது போனில் அவள் நம்பரை டயல் செய்ய...புஜ்ஜி குட்டி என்று வருகிறது. வெட்கத்தில் முகம் சிவந்து நிற்கிறாள் ரோஜா.

வெறித்தன ஆட்டத்தை ஆரம்பித்த ஹர்த்திக் பாண்டியா: 39 பந்துகளில் 105 ரன்கள் குவிப்பு

இப்படி சாதாரண ஊடலையும், இளம் ஜோடியை வைத்து ரசிக்கும்படியான விதத்தில் ஷூட் செய்து ரோஜாவை மணக்க மணக்கத் தருகிறார்கள். ரோஜான்னலே சும்மா கும்முன்னுதானே இருக்கும்!

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்"

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: