Advertisment

வெறித்தன ஆட்டத்தை ஆரம்பித்த ஹர்த்திக் பாண்டியா: 39 பந்துகளில் 105 ரன்கள் குவிப்பு

பாண்டியா தனது அறுவை சிகிக்கைக்குப் பிறகு விளையாடிய இரண்டாவது போட்டியில்,ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Hardik Pandya DY Patil Cup

Hardik Pandya DY Patil Cup

Hardik Pandya : நவி மும்பையில் நடந்த டி.ஒய் பாட்டீல் டி 20 கோப்பையில் வெறும் 39 பந்துகளில் 105 ரன்களைக் குவித்தார், இந்திய ஆல்ரவுண்டர் ஹார்டிக் பாண்டியா. முதுகுவலி அறுவை சிகிச்சைக்குப் பிறகு கடந்த வாரம் கிரிக்கெட்டுக்கு திரும்பிய ஹர்திக், தனது அதிரடி ஆட்டத்தில் 10 சிக்ஸர், 8 பவுண்டரிகளை விளாசினார்.

Advertisment

இன்றைய செய்திகள் Live : 234 சட்டமன்ற உறுப்பினர்களை கடத்துவோம், மர்ம கடிதம்

பாண்டியா தனது அறுவை சிகிக்கைக்குப் பிறகு விளையாடிய இரண்டாவது போட்டியில்,ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார். கன்சோலியில் உள்ள ரிலையன்ஸ் கார்ப்பரேட் பூங்காவில் நடந்த இறுதி லீக் ஆட்டத்தில் ரிலையன்ஸ் 1 சிஏஜியை 151 ரன்களுக்கு ஆட்டமிழக்கச் செய்தார். பரோடாவைச் சேர்ந்த ஆல்ரவுண்டரின் வெறித்தனமான இந்த விளையாட்டை, தேர்வாளர்கள் தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் கவனித்தார்.

5 மாதங்களுக்கு முன்பு காயமடைந்த இந்திய அணியின் வளரும் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா அறுவை சிகிச்சை, அதன் பிறகான மீட்பு சிகிச்சை ஆகியவற்றை முடித்து மீண்டும் உடற்தகுதி பெற்று இந்திய அணியின் தேர்வுக்குத் தயாராகி யுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

26 வயதான ஹர்திக் பாண்டியாவால், நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் கலந்துக் கொள்ள முடியவில்லை. இங்கிலாந்தில் சிகிச்சை முடித்து திரும்பிய அவர், பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் (என்.சி.ஏ) பந்துவீச்சு பயிற்சியைத் தொடங்கினார்.

ஆண்ட்ராய்ட், ஐபோன் பயனாளர்களுக்கு அடித்தது லக் – வந்தது வாட்ஸ் அப் டார்க் மோட்

முன்னதாக, கனரா வங்கி அணியை 174-7 என்ற கணக்கில் வெறும் 13.1 ஓவர்களில் வென்ற மேற்கு ரயில்வே அணி, காலிறுதிக்கு முன்னேறியது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்"

Hardik Pandya
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment