Advertisment

ஜாக்கெட் அணியாத சுந்தரி சீரியல் கேபிரியல்லா: ரஞ்சிதா பெரிய திரையில் இதை எப்பவோ பண்ணிட்டாங்க!

முதல் மரியாதை ராதா போல் ஜாக்கெட் அணியாமல் வீடியோ வெளியிட்ட சுந்தரி நடிகை கேபிரியல்லா

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Gabriella

சுந்தரி நடிகை கேபிரியல்லா (புகைப்படம் - இன்ஸ்டாகிராம்)

சுந்தரி சீரியல் நடிகை கேபிரியல்லா ஜாக்கெட் போடாமல் வெளியிட்டுள்ள ரீல்ஸ் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

சமூக ஊடகப் பதிவுகள் மூலம் பிரபலமான கேபிரியல்லா, விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானார். பின்னர் சின்னத்திரையில் அவ்வப்போது நடித்து வந்த கேபிரியல்லா, நயன்தாராவின் ஐரா படத்தில் நடித்தார். தொடர்ந்து கபாலி, காஞ்சனா 3 உள்ளிட்ட படங்களிலும் நடித்தார். தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியலில் சுந்தரியாக நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

இதையும் படியுங்கள்: அந்த நடிகருடன் முதல் முத்தக் காட்சி; முடிந்ததும் வாயை டெட்டால் போட்டு கழுவினேன்: பிரபல நடிகை ஓபன் டாக்

சமூக வலைதளங்களில் ஆக்டிவ் ஆக இருக்கும் கேபிரியல்லா, அவ்வபோது போட்டோஷூட் புகைப்படங்களையும், ரீல்ஸ் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் கேபிரியல்லா ஜாக்கெட் போடாமல் வெளியிட்டுள்ள ரீல்ஸ் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மொட்டை மாடியில் ஜாக்கெட் போடாமல், சேலையுடன் வெளியிட்டு இருக்கும் வீடியோவில், ”எனது சுதந்திரத்தையும் சுய விருப்பத்தையும் எனது மானமாக கருதுகிறேன்,” என்று கேபிரியல்லா பதிவிட்டுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Sun Tv Gabriella Sellus Sundari Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment