Advertisment

சன் டிவி-யின் சூப்பர் ஹிட் சீரியலுக்கு விரைவில் எண்ட் கார்டு; ரசிகர்கள் அதிர்ச்சி

3 வருடங்களாக ஒளிப்பரப்பாகி வரும் சன் டிவி-யின் சூப்பர் ஹிட் சீரியல் விரைவில் முடிவுக்கு வருகிறது; ரசிகர்கள் ஷாக்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Suntv Serial

கயல் - எதிர்நீச்சல் - இனியா - வானத்தை போல

ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்ற சன் டிவி சீரியல் ஒன்று விரைவில் முடிவுக்கு வர உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

Advertisment

சீரியல்களுக்கு பெயர் பெற்ற சன் டிவியில் கடந்த மூன்று ஆண்டுகளாக வெற்றிகரமாக ஒளிப்பரப்பாகி வரும் சீரியல் சுந்தரி. கிராமத்தில் பிறந்த பெண் ஒருவர், பல்வேறு போராட்டங்களுக்கு நடுவே தன்னுடைய ஐ.ஏ.எஸ் கனவை அடைகிறாளா? இல்லையா என்பது தான் இந்த சீரியலின் கதை.

இதையும் படியுங்கள்: கோவிலில் தீண்டாமையை எதிர்க்கொண்ட யோகி பாபு? வைரலாகும் வீடியோ காட்சிகள்

டி.ஆர்.பி ரேட்டிங்கில் டாப் 5க்குள் இருக்கும் இந்த சீரியலை இயக்குனர் அழகர் இயக்க வருகிறார். இந்த சீரியலில் டிக் டாக் மூலம் பிரபலமான கேபிரியல்லா கதாநாயகியாகவும், ஜிஷ்ணு மேனன் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். மற்றொரு நாயகியாக ஸ்ரீ கோபிகா நடித்து வருகிறார். மேலும் முக்கிய கதாபாத்திரங்களில், மனோகர் கிருஷ்ணா, இந்துமதி மணிகண்டன், சங்கீதா பாலன், ஜோதி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

sundari

கிராமத்து பெண்ணான சுந்தரியை விருப்பமில்லாமல் திருமணம் செய்து கொள்கிறார் கார்த்தி. ஆனால், பின்னர் அனு தன்னை காதலிப்பதை தெரிந்து கொண்டு அவரையும் ரகசியமாக திருமணம் செய்து கொள்கிறார் கார்த்தி. ஒரு கட்டத்தில் இந்த உண்மை சுந்தரிக்கு மட்டுமே தெரிந்த நிலையில், தற்போது குடும்பத்தினர் அனைவருக்கும் தெரிய வந்துள்ளது. ஆனால் அனுவுக்கு மட்டும் இந்த ரகசியம் தெரியாத நிலையில், இன்னும் சில தினங்களில், அனுவுக்கும் தெரியவரும் சூழல் உருவாகியுள்ளது. மறுபுறும், சுந்தரியும் ஐ.ஏ.எஸ் தேர்வை நல்லபடியாக எழுதி பாஸ் செய்துள்ளால், விரைவில் அவர் மாவட்ட ஆட்சியராக பதவி ஏற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி விரைவில் சுந்தரி சீரியல் விரைவில் முடிவுக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது. அதேநேரம், அனுவுக்கு, கார்த்தியின் முதல் மனைவி சுந்தரி தான் எனத் தெரியவந்தால், அனு என்ன முடிவெடுப்பார் என்பது தான் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது. ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற சுந்தரி சீரியல், விரைவில் முடிவடைய உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Sun Tv Sundari Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment