scorecardresearch

கிராமத்து கேப்ரில்லா To சன் டி.வி சுந்தரி: இந்த எமோஷனல் ஸ்டோரியை கவனிச்சீங்களா?

வாழ்க்கையில் பல அவமானங்கள் பட்டாலும், இப்ப நீங்க ரசிக்கிற வானவில்லா இருக்குறேன் – சுந்தரி சீரியல் கேப்ரில்லா நெகிழ்ச்சி பேச்சு

Sundari serial Gabriella emotional speech at Sun Kudumbam Awards: சன் குடும்ப விருதுகள் விழாவில் தன் சின்னத்திரை பயணத்தை விவரிக்கும் சுந்தரி சீரியல் கேப்ரில்லாவின் பேச்சுக்கு அரங்கமே எழுந்து நின்று கைதட்டியது.

பொதுவாக சினிமா மற்றும் சின்னத்திரையில் நடிக்க வேண்டும் என்றால் அழகு முக்கியம் என்று பொதுவான கருத்துக்கள் உலா வருகிறது. ஆனால் நிறம் முக்கியமல்ல திறமை இருந்தால் போதும் எதையும் சாதித்து விடலாம் என்ற கருத்தும் பரவலாக சொல்லப்படுவதும் உண்டு. அந்த கருத்தை உண்மையாக்கும் வகையில் பல பெண்களும் தங்களது திறமைகளை வெளிப்படுத்தும் சாதனை பட்டியலில் இடம்பிடித்துள்ளனர். 

அவர்களில், டிக் டாக் மூலம் பிரபலமடைந்து தற்போது சின்னத்திரையில் ஜொலித்துக் கொண்டிருக்கும் கேப்ரில்லா முக்கியமானவர். இவர் சன் டிவியின் முக்கிய சீரியலான சுந்தரியில் நாயகியாக நடித்து வருகிறார். விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் கேப்ரில்லா. பின்னர் விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொண்ட கேப்ரில்லா, குறும்படங்களிலும் நடித்துள்ளார்.

மேலும், நயன்தாரா நடிப்பில் வெளியான ஐரா படத்தில், சிறுவயது நயன்தாரா கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார் கேப்ரில்லா. தற்போது சில படங்களில் நடித்து வரும் கேப்ரியல்லா. சன் டிவியின் சுந்தரி சீரியலில் நாயகியாகவும் நடித்து வருகிறார். இதன் மூலம் ஏராளமான ரசிகர்களையும் கேப்ரில்லா சேர்த்துள்ளார்.

இதையும் படியுங்கள்: என்னாது… வேடத்திற்கு ஏற்ற மாதிரி நடிச்சா ஆயுசு குறையுமா? சன் டி.வி விழாவில் மிரள வைத்த பிரபல நடிகர்

இந்தநிலையில், தற்போது சன் குடும்பம் விருதுகள் விழாவில் பேசிய கேப்ரில்லா, தனது வெற்றி பயணத்தை விளக்கும் குறு நாடகத்தை மேடையில் அரங்கேற்றினார். சிறு வயது முதல் டிவியில் தன் முகம் வரவேண்டும் என்று ஆசைப்பட்டதாக கூறும் கேப்ரில்லா, நாம ரொம்ப ஆசைப்படுற விஷயம் நடக்காமல் போகும்போது, மனசுல ஒரு பொறுமையும் அமைதியும் வரும். அது நம்மை வெற்றியை நோக்கி நகர்த்தும் என்று கூறுகிறார்.

பல இடங்களில் தான் நிராகரிக்கப்பட்டதை கூறும் கேப்ரில்லா, அப்போது தான் பட்ட அவமானங்களை விவரிக்கிறார். மேலும், உனக்கு சினிமா, சின்னத்திரை எல்லாம் சரி வராது, ஒரு பெண்ணால் இதெல்லாம் முடியாது என வீட்டிலிருந்து அழைப்பு வர, பெண்களுக்கு என்று விதிக்கப்பட்ட வரையறைக்குள் அடங்குறவ நான் இல்ல, நான் சாதிப்பேன் என அம்மாவிடம் அனுமதி கேக்க, அவரின் அம்மா சம்மதித்ததாக கூறுகிறார்.

பின்னர் சன் டிவி வாய்ப்பு கிடைத்ததை பற்றி கூறும் கேப்ரில்லா, என்னை பார்க்கிற பலருக்கு நான் அவங்களாதான் தெரிவேன். ஏன்னா, அவங்களால் சாதிக்க முடியாதத நான் சாதிக்கிறப்ப, அவங்களே சாதிச்ச மாதிரி சந்தோஷப்படுறாங்க. நான் பல கஷ்டங்கள் பட்டாலும், நான் இப்ப நீங்க எல்லாம் ரசிக்கிற வானவில்லா இருக்குறேன் என்று கூற அரங்கமே எழுந்து நின்று கைத்தட்டியது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Sundari serial gabriella emotional speech at sun kudumbam awards