அர்ஜூனை பார்த்து ரோஜா கேட்ட கேள்வி…வக்கீலே ஆஃப் ஆயிட்டாப்ல

எதிர்க்கட்சி வக்கீலை பேச விடாமல் தூக்கு தண்டனை வாங்கித் தருவீங்க

Roja serial Sun TV
Roja serial Sun TV

Roja serial Sun TV : சன் டிவியின் ரோஜா சீரியலில் ரோஜா, அர்ஜுன் இருவரும் ஒரு வருட கான்டராக்ட் கல்யாணம் செய்துக்கொண்டு, வீட்டை ஏமாற்றி தம்பதி போல நடித்து வாழ்ந்து வருகின்றனர். இருவருக்குள்ளும் எந்த டச்சிங் டச்சிங்கும் இல்லை. இந்த நேரத்தில் ரோஜா வாந்தி எடுக்க, உண்டாகி இருக்கிறாள் என்று வீடே குதூகலம் ஆகிறது. உண்மை ரோஜாவுக்குத்தானே தெரியும்! இல்லை இல்லைன்னு சொல்லியும் வீட்டினர் நம்பவில்லை.

சரி, டாக்டர் உறுதி படுத்தட்டும் என்று ரோஜா சொல்ல, ஒண்ணுமே இல்லாமல் டாக்டரும் ஆமா, உங்க மருமக உண்டாகி இருக்கான்னு சர்டிபிகேட் கொடுத்துட்டாங்க. இப்போ ரோஜாவை அர்ஜுன் எப்படி எல்லாம் கேள்வி கேட்கறான் பாருங்க…ஆமா ரோஜா, இன்னும் ஒரு மூணு மாசம் ஆனா, உன் வயிறு தெரிய ஆரம்பிச்சுரும்…அப்போ வந்த வயித்தோட கோர்ட்டுக்கு சாட்சி சொல்ல வருவியான்னு கேட்டு கடுப்பேத்தறான். சார் என்னை கொஞ்சம் பேச விடுங்கன்னு ரோஜா சொல்றா.

அப்போதும், ஏன் ரோஜா நீ எங்கேயும் வெளியில் போனதில்லை…நான்தான் உன்னை மார்க்கெட்டில் கூட ரெண்டு நாள் அழைச்சுட்டு போயி விட்டுட்டு அழைச்சுட்டு வந்தேன்…அப்புறம் எப்படி இப்படின்னு மறுபடியும் கேட்கிறான். ரோஜா சார் சார் என்று மறுபடியும் பேச வர. சரி பரவாயில்லை அவசரப்பட்டுட்டே…நீ வேலைக்கு போறேன்னு சொல்லி கிளம்பி போயி பகலில் உன் காதலன் கூட வாழ்ந்துக்கோ..ராத்திரிக்கு வீட்டுக்கு வந்துடு என்று அவ்ளோ பெரிய மனசுக்காரன் போல அர்ஜுன் சொல்ல கடுப்பாகிறாள் ரோஜா.

பிரபல சீரியலுக்கு விரைவில் எண்ட் கார்டு போடுகிறதா சன் டிவி?

சார்…இப்படித்தான் நீங்க கோர்ட்டில் எதிர்க்கட்சி வக்கீலை பேச விடாமல் தூக்கு தண்டனை வாங்கித் தருவீங்க போலிருக்குன்னு கத்த, ரோஜா என் தொழில் பத்தி எதுவும் பேசாதேன்னு இவனும் சொல்றான். பின்னே என்ன சார், நான் உண்டாகி இருக்கேனா இல்லையான்னு எனக்குத் தெரியாதா? டாக்டர் சர்டிபிகேட் எப்படி இப்படி வந்துச்சுன்னு தெரியாம நானே குழம்பிப் போயிருக்கேன்..நீங்க வேற என்று சொன்னதும்தான் அர்ஜுன் கலாய்க்கிறதை விட்டான்.

என்ன இருந்தாலும் வீட்டில் புருஷனா நடிக்கணுமே.. ரோஜா கொலு வைக்கணும்னு பொம்மை வாங்க கடைக்கு கூப்பிட, வீட்டினர் அனைவரும் இருவரையும் கடைக்கு அனுப்பி வைக்கறாங்க. நான் கிரிமினல் லாயர் உன்கூட கடைக்குள்ளே வர மாட்டேன் ரோஜான்னு சொல்லி வெளியில் நின்னவன், ரோஜா வரிசையாக நின்று ஆடிக்கொண்டு இருந்த டான்சிங் பொம்மைகளில் ஒன்றாக நின்று ஆட…அடடா என்ன ஒரு அழகு..அர்ஜுனும் அவளை பார்த்து கடைக்குள் வந்துவிட்டானே.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Suntv roja serial roja serial new episodes sun next sun tv serial roja serial arjun

Next Story
நடிகை வடிவுக்கரசி-க்கு கிடைத்த அங்கீகாரம்.. பாரதிராஜாவை மறப்பாரா என்ன?zee tamil tv show
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com